கனமழை கொட்டி தீர்த்தது; 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

-நமது நிருபர்-

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.

* தென்காசி,

* திருநெல்வேலி,

* கன்னியாகுமரி

* தூத்துக்குடி

* திருப்பத்தூர்

ஆகிய 5 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 22) மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கம் காரணமாக, தென் மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை தெரிவித்துள்ளது.

ஆரஞ்ச் அலெர்ட்

துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ அறிவிக்கப்பட்டு உள்ளது.

Source link