விஷ்ணு ரெட்டி மற்றும் அவரது சகோதரர்கள் கட்டுப்பாட்டில் கனிம வளங்கள் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிடப் போவதாக அதிரடியாக பேசியுள்ளார். மேலும் முதலமைச்சர் மீதான வழக்கு குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பதிலுரை மீது எதிர் கேள்விகளை முன்வைக்க திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார். பின்னர் வெளிநடப்பு செய்த திமுகவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் நண்பர்கள், அவரது அலுவலகத்தில் இருக்கும் ஆபிசர்ஸ் விஷ்ணு ரெட்டியை பற்றி ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். இவருக்கு நன்றி தெரிவித்து பேரவையில் அமைச்சர் ஒருவர் பேசியதை பார்த்திருப்போம். இவருடைய மச்சான் சுஜய் ரெட்டி, பிஸினஸ் பார்ட்னர் அனில் ரெட்டி என அனைவரும் சேர்ந்து கொண்டு அரசு நடத்தும் கனிமவளங்களை முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதற்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிடப் போகிறேன் என்று தெரிவித்தார்.
Source link
