கருங்கல் குவாரிகளுக்கு அனுமதி மறுப்பு: மறுபரிசீலனை செய்ய தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில், மூன்று இடங்களில், கருங்கல் குவாரிக்கு அனுமதி கோரிய மனு நிராகரிக்கப்பட்டதை, மறு பரிசீலனை செய்ய, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பழையசீவரம்; கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, நாகர்கோவில் அடுத்த கோட்டார் பகுதியில், வெவ்வேறு நபர்கள் கருங்கல் குவாரிக்கு அனுமதி கோரினர். அவர்களின் மனுக்களை, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஆய்வு செய்தது.

மனுவில் குறிப்பிடப்பட்ட இடங்களில், புதிதாக கருங்கல் குவாரிக்கு அனுமதி வழங்க முடியாது என, ஆணையம் முடிவு செய்தது.

தங்கள் கோரிக்கையை நிராகரித்து, ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி, சம்பந்தப்பட்ட மனுதாரர்கள், தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டனர்.

இதை விசாரித்த தீர்ப்பாயம், தனித்தனியாக பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரங்களில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், தன் உத்தரவை மறு பரிசீலனை செய்யலாம். இதில் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களை, தனித்தனியாக அழைத்து, அவர்கள் வாதத்தை கேட்கலாம். அதன்பின், அவர்களின் கோரிக்கையை ஏற்பதா என்பது குறித்து, எட்டு வாரங்களுக்குள் ஆணையம் முடிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link