கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து

கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கிய அரசாணையை, உயநீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது. சுயதொழில் முனைவோராக ஏன்  மாற்றக்கூடாது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 

கரூரில் அரசுப்பணி…கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்குவது அரசின் கொள்கை முடிவு எனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கரூருக்குப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதே நேரத்தில், பணி நியமனம் வழங்கப்பட்ட நாளன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்காலிக அடிப்படையில் மட்டுமே இப்பணி நியமனங்களை வழங்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இறுதி நிலைப்பாடு…ஆனால், ‘இதுபோன்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா? கொள்கை முடிவு எடுத்து அரசு இதனை வழங்க முடியுமா? இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் TNPSC விதிகள் என்ன கூறுகின்றன?’ என்பதை எல்லாம் கேட்டறிந்த பின்னரே, நாங்கள் எங்களுடைய இறுதி நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கூறியிருந்தது.

வழக்கு விசாரணைஇந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எனப் பலர் இது குறித்துப் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர். அவர்களது மனுக்களில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களில் தகுதியின் அடிப்படையில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிய அரசின் முடிவு, சட்டப்பூர்வமான பணியாளர் தேர்வு முறையைப் பின்பற்றாமல் செய்யப்பட்ட ஒரு தற்காலிக ஏற்பாடாகும். மேலும், இது தங்களுக்குப் பிடித்தமான அரசுப் பணியைத் தேர்ந்தெடுத்து பெறும் தவறான ஒரு வாய்ப்பை உருவாக்கிவிடும்,’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

இடைக்காலத்தடை, கோரிக்கை இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில், இரு தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில், ‘இதுபோன்ற விபத்து மற்றும் அசம்பாவித சம்பவங்களில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நேரடியாக அரசுப்பணி வழங்கும் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். போட்டித் தேர்வுகள் மற்றும் சட்டப்பூர்வ விதிமுறைகளின் அடிப்படையிலேயே அரசுப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

டிஎன்பிஎஸ்சி மனு தாக்கல் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் தற்போது இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ‘கருணை அடிப்படையிலான இதுபோன்ற சிறப்புப் பணி நியமனங்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் TNPSC அனுமதி தேவையில்லை’ எனத் தேர்வாணையத்தின் சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசுப்பணி வழங்கிய அரசாணையை  மதுரை உயர்நீதிமன்ற அமர்வு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. 

            

Source link