200 ஆண்டுகளுக்குப் பின் கலபகோஸ் ரயில் பறவை மீள்வருகை!

ஃப்ளோரியானாவை மீட்டெடுக்கும் அமைப்புகளில் ஒன்றான ‘ஐலேண்ட் கன்சர்வேஷன்’ நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு வனவிலங்கு கால்நடை மருத்துவரான பவுலா காஸ்டானோ கலபகோஸ் ரெயில் பறவையை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை,. அது ஃப்ளோரியானாவில் திடீரெனத் தோன்றியது, என்றும் ஒருவேளை அது இத்தனை காலமும் ஒரு சிறிய, மறைவான, கவனிக்கப்படாத இனமாக அங்கேயே தங்கியிருந்திருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார்.

கலாபகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள, மக்கள் வசிக்கும் இந்தச் சிறிய தீவில் இப்பறவை அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டாலும் , கூச்ச சுபாவமுள்ள, ஏறக்குறைய பறக்க இயலாத இந்தப் பறவை, மற்ற சில தீவுகளில் இன்னும் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு, புளோரியானாவில் இருந்து எலிகள் மற்றும் காட்டுப் பூனைகள் அகற்றப்பட்ட பிறகு, இந்தப் பறவை மீண்டும் அங்கு தோன்றி இயற்கைப் பாதுகாப்பு ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காணாமல் போன இந்தப் பறவை எப்படித் திரும்பியது என்பது ஒரு மர்மமாகவே உள்ளது.

குறிப்பாக ஆக்கிரமிப்பு வேட்டையாடிகளான எலிகள், பூனைகளின் அச்சுறுத்தலில் இருந்து விடுபட்ட கலாபகோஸ் பறவைகள்.200 ஆண்டுகளுக்குப் பிறகு, வியக்கத்தக்க மீள்வருகை மற்றும் புதுமைப் படைப்புகளை நிகழ்த்தி வருகின்றன.

Source link