கர்நாடகா​வில் எஸ்ஐஆர் மூலம் 99.32 லட்சம் வாக்காளர்கள்​ நீக்கம்

பெங்​களூரு: கர்​நாடக மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​கள் (எஸ்ஐஆர்) கடந்த ஜூன் 30ம் தேதி தொடங்கியது. வாக்​குச்​சாவடி முகவர்​கள் வீடு வீடாக சென்று வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்​கான விண்ணப்பம் வழங்​கினர்.

இந்த படிவங்​களை வாக்​காளர்கள் நிரப்பி இறந்​தவர்​கள், இடமாறிய​வர்​கள் உள்​ளிட்​டோரின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டனர். இதையடுத்து க‌டந்த ஆகஸ்ட் 17-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளி​யிடப்​பட்​டது. இதில் 1.08 கோடி பேரின் பெயர்​கள் நீக்​கம் செய்​யப்​பட்​டிருந்​தன.

இதற்கு ஆட்​சேபனைகளை தெரிவிக்​க​வும், வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்​க​வும் காலஅவ​காசம் வழங்​கப்​பட்​டது. இதையடுத்து 129 நாட்​களாக நடந்து வந்த வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முழு​வது​மாக முடிவடைந்​துள்​ளது. இதையடுத்து நேற்று இறுதி வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது.

அதன்​படி மொத்​தம் 99.32 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன‌. மொத்த வாக்​காளர்​களின் எண்​ணிக்கை 5.54 கோடி​யில் இருந்து 4.55 கோடி​யாக சரிந்​துள்​ளது. இதில் 2.29 கோடி பெண் வாக்​காளர்​களும், 2.25 கோடி ஆண்​ வாக்​காளர்​களும்​ உள்ளனர்.

Source link