கர்நாடகாவுக்கு சாதகமாக செயல்படும் மத்திய அரசு: கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: மேகே​தாட்டு அணை கட்ட தமிழகத்​தின் அனு​மதி தேவை​யில்லை என்று மத்​திய இணை அமைச்​சர் பதில் அளித்​துள்ள நிலை​யில், கர்​நாடக அரசுக்கு ஆதர​வாக மத்திய அரசு செயல்​படு​வ​தாக கட்சி தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

திர்க்​கட்சி தலை​வர் உதயநிதி ஸ்டா​லின்: மேகே​தாட்டு அணை கட்ட தமிழகத்​தின் அனு​மதி கர்​நாடகா​வுக்​குத் தேவை​யில்லை என்ற மத்​திய இணை அமைச்​சரின் பதில், காவிரி விவ​காரத்​தில் தமிழகத்​தின் உரிமையை கேள்விக்​குறி​யாக்கி இருக்​கிறது. தமிழகத்​தின் உரிமையை அடகு வைத்​துள்​ளார் முதல்​வர்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: மத்​திய நீர்​வளத் துறை இணை அமைச்​சர் மாநிலங்​களவை​யில் அளித்த பதில், தமிழக மக்​களிடையே அதிர்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது. சம்​பந்​தப்​பட்ட மாநில மக்​களின் உணர்​வு​களை மனதில்​கொண்டு பதில் அளிக்க வேண்​டும்.

மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ: கர்​நாடக மாநிலம், மேகே​தாட்டு அணை கட்​டு​வதற்கு பாஜக அரசு வஞ்​சக​மான முறை​யில் அனு​மதி வழங்க முனைந்​திருப்​பது கடும் கண்​டனத்​துக்​குரியது. மேகே​தாட்டு அணை குறித்து கர்​நாடக அரசுடன் நேரடி பேச்​சு​வார்த்தை என்​பதே கூடாது.

பாமக தலை​வர் அன்​புமணி: மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் மத்​திய அரசு எடுத்​துள்ள புதிய நிலைப்​பாடு நமக்கு சொல்​லும் செய்தி என்​னவென்​றால், காவிரி நீரை தமிழ்​நாட்​டுக்கு வழங்​காமல் இருப்​ப​தற்​காக பெரும் சதி நடக்​கிறது என்​பதும், இதில் மத்​திய பாஜக அரசும் பங்​கு​தா​ர​ராக உள்​ளது என்​பதும்​தான். இந்த விவ​காரத்​தில் தமிழக அரசு கூடு​தல் எச்​சரிக்கை​யுடன் செயல்பட வேண்​டும்.

மார்க்​சிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: மேகே​தாட்டுஅணை கட்​டு​வதற்கு கர்​நாடகா​வுக்கு தமிழகத்​தின் ஒப்​புதல் தேவை​யில்லை என மத்​திய அமைச்​சர் அளித்​துள்ள பதில் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்தி​யுள்​ளது. மேகே​தாட்​டு​வில் அணை கட்​டும் கர்​நாட​கா​வின் முயற்​சிக்கு சாதக​மாக செயல்​படும் மத்திய பாஜக அரசின் போக்கு கண்​டனத்​துக்​குரியது.

வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை: மத்திய நீர்வளத் துறை அமைச்சரின் பதில் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இரு சகோதர மாநிலங்களுக் கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்துக்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

ஐஜேகே தலை​வர் ரவி பச்​ச​முத்​து: இரண்டு மாநிலங்​களுக்கு இடையி​லான நதிநீர் உரிமைப் பிரச்​சினை​யில் நடுநிலை​யுடன் செயல்பட வேண்​டிய மத்​திய அரசின் பிர​தி​நி​தி, இவ்​வாறு கருத்து தெரி​விப்​பது தமிழக மக்​களின் உணர்​வைப் புண்​படுத்​தும்​ செய​லாகும்​.

Source link