கர்நாடகா வழங்க வேண்டிய காவிரி நீர் நிலுவை அதிகரிப்பு

சென்னை: தமிழகத்திற்கு, கர்நாடகா அரசு வழங்க வேண்டிய, காவிரி நீரின் அளவு, 24.8 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா வழங்க வேண்டும். மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரின் அளவு, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி., நீரை வழங்கியிருக்க வேண்டும். அதற்கு பதிலாக 2.19 டி.எம்.சி., நீரை மட்டுமே, கர்நாடகா அரசு விடுவித்துள்ளது.

நடப்பு ஜூலை மாதம் 31.2 டி.எம்.சி., நீரை வழங்க வேண்டும். அதில் 19ம் தேதி வரை, 19.4 டி.எம்.சி., நீரை வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால், 0.52 டி.எம்.சி., நீர் மட்டுமே, தமிழக எல்லைக்கு வந்துள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, இந்த நீர் கிடைத்துள்ளது. கர்நாடகா வழங்க வேண்டிய நிலுவை நீரின் அளவு, 24.8 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது.

நிலுவை நீரின் அளவு கூடிக்கொண்டே வருவதால், தமிழகத்தில் பாசனம், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

Source link