கர்நாடக மேலவை தேர்தல்: 4 இடங்களிலும் காங்கிரஸ் தோல்வி..!

Summary

கர்நாடகாவில் நடைபெற்ற 4 இடங்களுக்கான மேலவை தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் 75 சட்ட மேலவை உறுப்பினர்கள் பதவிகள் உள்ளன. இதில் 4 காலியான இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட்டதால் வாக்குகள் நீண்ட நேரமா எண்ணப்பட்டன.

4 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வி

கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மற்றும் நகராட்சி அமைப்புகள் பிரதிநிதிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், ஆளுநர் ஆகியோர் மூலம் மேலவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கும் தென்கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கும், ஆசிரியர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் பெங்களூரு, வடகிழக்கு தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

நான்கு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்டது. காங்கிரசை எதிர்த்து மதசார்பற்ற ஜனதா தளம் பெங்களூரு தொகுதியில் போட்டியிட்டது. மற்ற மூன்று இடங்களில் பாஜக போட்டியிட்டது.

இதில் காங்கிரஸ் 4 தொகுதிகளையும் இழந்துள்ளது. ஆசிரியர்களுக்கான பெங்களூரு தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் ஏ.பி. ரங்கநாத், பாஜக ஆதரவு உடன் காங்கிரஸ் எம்.எல்.சி. (மேலவை உறுப்பினர்) புட்டண்ணாவை வீழ்த்தினார். பட்டண்ணா 9,902 வாக்குகள் பெற்ற நிலையில், ரங்கநாத் 10,810 வாக்குகள் பெற்று 908 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று புட்டண்ணா கோரிக்கை விடுத்துள்ளார்.

பாஜக உறுப்பினர் தொடர்ந்து 5 முறையாக வெற்றி

ஆசிரியர்களுக்கான வட-கிழக்கு தொகுதியில் தற்போதைய பாஜக எம்.எல்.சி. ஷஷில் ஜி. நமோஷி, காங்கிரஸ் வேட்பாளர் ஷரணப்பா மாத்தூரை வீழ்த்தியுள்ளார். பாஜக வேட்பாளர் நமோஷி தொடர்ச்சியாக 5 முறை வெற்றி பெற்றுள்ளார். இவர் 3,297 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பட்டதாரிகளுக்கான தென்-கிழக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் கே.எம். சுரேஷ் 23,098 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பட்டதாரிகளுக்கான மற்றொது தொகுதியான மேற்கில், தற்போதைய பாஜக எம்.எல்.சி. வி. ஷங்கனூர் 9,323 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

டி.கே. சிவக்குமார் பிரசாரம்

முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், காங்கிரஸ் செயல் தலைவர் பி.கு. ஹரி பிரசாத், அமைச்சர்கள் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.

75 மேலவை உறுப்பினர்களில் 38 காங்கிரஸ், 24 பாஜக, 6 மதசார்பற்ற ஜனதா கதளம், ஒரு சுயேட்சை, தலைவர் சலீம் அகமது உள்ளனர். அரசு நியமனம் செய்யும் 5 இடங்கள் இன்னும் காலியாக உள்ளனர்.

75 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறை

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 171-இன்படி, மேலவை உறுப்பினர்கள் பல்வேறு பிரிவினர் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

• சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) மூலம் (1/3 பங்கு – 25 இடங்கள்): கர்நாடக மாநில சட்டப் பேரவைக்கு (கீழவை) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) தங்களின் வாக்குகள் மூலம் இந்த 25 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

• உள்ளாட்சி அமைப்புகள் மூலம் (1/3 பங்கு – 25 இடங்கள்): மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்ட ஊராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளின் பிரதிநிதிகள் (வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள்) இந்த 25 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கிறார்கள்.

• பட்டதாரிகள் மூலம் (1/12 பங்கு- 7 இடங்கள்): கர்நாடகாவில் வசிக்கும், குறைந்தது 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் (Graduates) இந்த 7 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

• ஆசிரியர்கள் மூலம் (1/12 பங்கு- 7 இடங்கள்): மாநிலத்தில் உள்ள இடைநிலை அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் குறைந்தது 3 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்கள் வாக்களித்து இந்த 7 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

• ஆளுநர் நியமனம் (11 இடங்கள்): கலை, அறிவியல், இலக்கியம், கூட்டுறவு இயக்கம் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநில அரசின் பரிந்துரையின் பேரில் கர்நாடக ஆளுநர் நேரடியாக நியமிக்கிறார்.

Source link