கல்விப்பணியில் தினமலர் நாளிதழ் ; மாணவர்களுக்கு உதவி

நாசிக்: ஒவ்வொரு வருடமும் நாசிக்கில் உள்ள கங்கமுலுங்கி என்ற இடத்தில் அமைந்துள்ள ஜில்லா பரிஷத் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களும் கல்வி உபகரணங்களும் கடந்த 6 (வருடம் 2020 முதல்) வருடங்களாக தொடர்ந்து வழங்கி வருகின்றோம் .

சென்ற வருடம் 2025 தினமலர் நாளிதழும் இந்த சீரிய கல்விப்பணியில் தமிழ் சங்கத்துடன் இணைந்து செயலாற்றி வருவது மிகப் பெருமிதமான அம்சமாகும். பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப் பைகளும் மற்றும் பள்ளிக்கு ஆண்ட்ராய்டு டிவி ஒன்றையும் வழங்கியது என்பதனை மகிழ்வோடும் நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த வருடம் 2026 தமிழ் சங்கம் சார்பில் புத்தக நோட்டுப் புத்தகங்களும் ,ஜாமென்ட்ரி பாக்ஸ் ,பென்சில் ,பேனா , வண்ண கிரயான்ஸ், மற்றும் கிராப் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன .

Source link