கல்வியில் கிங்: 60% பேர்கிட்ட டிகிரி இருக்கு… முதல் இடத்தில் கனடா; லிஸ்டில் இல்லனாலும் இந்தியா தான் டாப்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் மக்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றைத் தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாகக் கல்வி திகழ்கிறது. பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 2026-ஆம் ஆண்டிற்கான லேட்டஸ்ட் தரவுகளின்படி, 25 முதல் 64 வயதுக்குட்பட்ட பெரியவர்களில் உயர்கல்வி முடித்தவர்களின் விகிதாச்சார அடிப்படையில் உலகின் டாப் 10 கல்வி நாடுகளின்  பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

இப்படி ஒரு வீட்டைப் பார்த்திருக்கீங்களா? மேலே நெடுஞ்சாலை, கீழே 12 மாடி அபார்ட்மெண்ட்… எங்க இருக்கு தெரியுமா?

கனடா 

உலகிலேயே அதிகக் கல்வியறிவு பெற்ற நாடாகக் கனடா முதலிடத்தில் நீடிக்கிறது. இங்குள்ள பெரியவர்களில் 60%-க்கும் அதிகமானோர் உயர்கல்வி முடித்துள்ளனர். வெறும் 4 ஆண்டு டிகிரி மட்டுமல்லாமல், இவர்களது வலுவான கல்லூரி மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களின் நெட்வொர்க் தான் இதற்குக் காரணம்.

ஜப்பான் 

இந்த விசித்திரப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ஜப்பான், அறிவியல் மற்றும் கணிதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் மிகவும் ஒழுக்கமான, கட்டமைக்கப்பட்ட கல்வி முறையைக் கொண்டுள்ளது.

அயர்லாந்து

கடந்த இருபது ஆண்டுகளில் அயர்லாந்தின் கல்வி நிலை அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இங்குள்ள உழைக்கும் வர்க்கத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் உயர்கல்வி தகுதி பெற்றுள்ளனர். இளைஞர்களும், அரசின் தொடர் முதலீடும் இதற்கு முக்கியக் காரணம்.

இஸ்ரேல் 

உலகளாவிய தொழில்நுட்ப மையமாகத் திகழும் இஸ்ரேலின் கல்வி முறை மிகவும் விசித்திரமானது. பெரும்பாலான மக்கள் தங்களது கட்டாய ராணுவ சேவைக்குப் பிறகே உயர்கல்வியைத் தொடர்கிறார்கள். இது அவர்களுக்குப் பிராக்டிகல் மற்றும் அகாடமிக் அறிவை ஒன்றாகத் தருகிறது.

தென்கொரியா 

கடுமையான போட்டி நிறைந்த கல்விச் சூழலுக்குப் பெயர் பெற்ற தென்கொரியா, சர்வதேச அளவிலும் குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் துறைகளிலும் உலகின் டாப் மார்க்குகளை அள்ளி வருகிறது.

ஐக்கிய இராச்சியம் 

பழமையான பல்கலைக்கழகக் கட்டமைப்பு மற்றும் வலுவான ஆராய்ச்சித் துறையின் காரணமாக பிரிட்டன் இந்த டாப் வரிசையில் தொடர்ந்து நீடிக்கிறது.

அமெரிக்கா 

உலகின் டாப் ரேங்க் பல்கலைக்கழகங்கள் மற்றும் அசுர ஆராய்ச்சி வெளியீடுகளுடன் அமெரிக்கா புதுமைகளின் உலகளாவிய தலைவனாகத் திகழ்கிறது. இருப்பினும், உயர்கல்வி முடித்தவர்களின் சதவீத விகிதத்தில் சில சிறிய நாடுகளை விடப் பின்தங்கியுள்ளது.

ஆஸ்திரேலியா 

உலகளாவிய கல்வி நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்பட்ட ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியா, சர்வதேச மாணவர்களின் டாப் சாய்ஸாக உள்ளது.

ஸ்வீடன் 

இங்குப் பல்கலைக்கழகக் கல்வி முற்றிலும் இலவசம். இதனால் எவ்விதப் பொருளாதாரத் தடையும் இன்றி அனைவரும் கிரியேட்டிவ் மற்றும் தொழில்நுட்பக் கல்வியைப் பெற முடிகிறது.

நார்வே 

ஸ்வீடனைப் போலவே நார்வேயும் தனது தேசிய வளத்தைப் பயன்படுத்தி பின்னணி பாராமல் அனைவருக்கும் இலவச உயர்கல்வியை வழங்கி இந்த டாப் 10 பட்டியலை நிறைவு செய்கிறது.

டாப் 10 பட்டியலில் இந்தியா ஏன் இல்லை?

சதவீத விகிதாச்சார அடிப்படையில் இந்தியா இந்த டாப் 10 பட்டியலில் பின்தங்கியிருந்தாலும், எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாதான் உலகிலேயே முதலிடம்.  CBRE ஆராய்ச்சியின் லேட்டஸ்ட் தரவுகளின்படி, இந்தியாவில் உயர்கல்வி முடித்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 13.94 கோடி ஆகும். இந்த எண்ணிக்கை, மேலே உள்ள டாப் 10 பட்டியலில் இருக்கும் பெரும்பாலான நாடுகளின் மொத்த மக்கள் தொகையை ஒன்றாகச் சேர்த்தால் வரும் தொகையை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source link