கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு என்ன காரணம்..? விசாரணை அறிக்கையில் வெளிவந்த பகீர்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2024ம் ஆண்டு மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்த 67 பேர் இறந்தனர். இச்சம்பவம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், “கள்ளச்சாராயம் விற்பனைக்கு பெயர்போன இடங்களில் போலீஸ் மற்றும் வருவாய் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்காததன் விளைவாக மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மதுவிலக்கு, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் அலட்சியமும், கடமை தவறிய போக்கும் இருந்துள்ளது.

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிராப்பாளையம் வட்டங்களின் விஏஓக்கள், வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் மதுவிலக்கு அதிகாரிகள் இந்த சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள். மெத்தனால் போன்று மேலும் சில திரவங்கள் கலந்த சாராயத்தை குடித்ததால் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

கள்ளச்சாராயம் குறித்து முன்னெச்சரிக்கை செய்யாததே மரணங்கள் அதிகரிக்க காரணம் பாதிப்பு சம்பவம் தெரிந்தவுடன் கள்ளச்சாராயம் புழங்கும் இடங்களில் அதிகாரிகள் எச்சரிக்கை செய்யவில்லை. விழுப்புரத்தில் 2023ல் ஏற்பட்ட கள்ளச்சாராய துயர சம்பவத்தில் இருந்து, கள்ளக்குறிச்சியில் 2024ல் நிகழ்ந்த சம்பவம் வரை, கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய அதிகாரிகள் மீது துறை சார்ந்த விசாரணை தொடங்க வேண்டும்.

தொழில்துறைக்கு பயன்படுத்தப்படும் மெத்தனால் சட்டவிரோதமாக கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு செல்வதை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்கவும் நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

சட்டசபையில் நான் செய்தது..!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்..!! பரபரப்பு அறிக்கை..!!

Source link