“கவர்ச்சி என்பது தவறான விஷயம் அல்ல”
ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன், CM விஜய்யுடன் நடித்த மாஸ்டர் திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாகிருந்தாங்க. அதனைத்தொடர்ந்து மாறன், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்த இவங்க அண்மையில் வெளியான இதயம் முரளி திரைப்படத்தில் பகத் பாசிலுடன் இணைந்து கேமியோ கதாபாத்திரத்தில் நடிச்சிருந்தாங்க.
இந்த நிலையில் நடிகைகளின் கவர்ச்சி தோற்றம் குறித்து எழும் விமர்சனங்கள் தொடர்பாக சமீபத்தில் மாளவிகா மோகனன் அளித்த பேட்டியில், “எந்த நடிகையும் எல்லை மீறி நடிப்பதில்லை. ஆனால் சிலர் மட்டுமே தேவையற்ற வகையில் விமர்சிக்கிறார்கள்.
கவர்ச்சி என்பது தவறான விஷயம் அல்ல. அதை தவறான பார்வையுடன் அணுகுபவர்கள்தான் தங்களது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று வெளிப்படையாக தனது கருத்தை பகிர்ந்துருக்காங்க. மாளவிகா மோகனனின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டுட்டு வருது.
யார் யாருக்கு என்னென்ன தேசிய விருதுகள்?
இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டுச்சு. இதுல, 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான விருதுகள் வரிசையில், சிறந்த இயக்குநருக்கான விருதை அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமிக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருதை மகாராஜா படத்தில் நடித்த சச்சனா நமிதாஸ்க்கும், சிறந்த படமாக கேப்டன் மில்லர் படத்திற்கும், சிறந்த பின்னணி இசைக்கான விருதை அமரன் படத்தில் இசையமைத்த ஜிவி பிரகாஷ்க்கும், சிறந்த படத்தொகுப்புக்கான விருதை அமரன் படத்தில் இருந்து ஆர். கலைவாணனுக்கும் அறிவிக்கப்பட்டுச்சு.

அதே மாதிரி, சிறந்த சண்டை பயிற்சிக்கான விருதை மகாராஜா படத்தில் இருந்து அனல் அரசுக்கும், சிறந்த தமிழ்த் திரைப்படமாக ராயன் படத்திற்கும், சிறந்த நடிகருக்கான விருதை கேப்டன் மில்லர் படத்தில் நடித்த தனுஷ்க்கும், சிறந்த ஒலிப்பதிவுக்கான விருதை மெய்யழகன் படத்தில் ஒலிப்பதிவு செய்த சுரேன் ஜிக்கும், சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதை “BLUE” என்ற குறும்படத்தில் ஒலி வடிவமைப்பு செய்த டி.எஸ். ஹரிஹர சுதனுக்கும் விருது அறிவிக்கப்பட்டுருந்துச்சு. இப்படி தமிழ்த் திரையுலகில் இருந்து மொத்தமாக 10 தேசிய விருதுகள் கிடைக்கபெற்றுருக்கு.
‘சண்டக்கோழி’ முதலில் விஜய்க்காக உருவான கதை

சமீபத்தில் நடிகர் விஷால் பகிர்ந்த தகவலில், நான் ‘செல்லமே’ படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்துக்காக காத்திருந்தேன். அந்த நேரத்தில் ‘சண்டக்கோழி’ கதையின் ஒன்லைனை நான் கேட்டேன்.. கேட்டவுடனே, லிங்குசாமி சாரை நேரில் சந்தித்து, ‘இந்தப் படத்தை நான் செய்கிறேன்’ என்று சொன்னேன்.
பிறகுதான் இந்தக் கதை முதலில் விஜய்க்கு சொல்லப்பட்டதையும், அதன் பின்னர் சூர்யாவிடமும் எடுத்துச் செல்லப்பட்டதையும் தெரிந்துகொண்டேன். இறுதியில் அந்தக் கதை என்னிடம் வந்து சேர்ந்தது. ஒரு நடிகனாக இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பது உண்மையிலேயே மிகப்பெரிய அதிர்ஷ்டம்” என்று தனது கருத்தை வெளிப்படுத்திருக்கிறாரு.
