மத்திய அரசின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி மிகத் தெளிவாக விளக்கிய பிறகும், இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடவே ஸ்டாலின் முயற்சிக்கிறார். தமிழகத்தில் திமுக ஆட்சியின் ஊழல்கள், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை மறைக்க ‘மாநில உரிமை’ என்ற போர்வையில் இத்தகைய போலிப் பிரச்சாரங்களை அவர் செய்து வருகிறார்.
தற்போது தமிழகத்துக்கான எம்.பி. தொகுதிகள் 39-ல் இருந்து 59 ஆக உயரும் என்ற செய்தி வெளிவந்துள்ள நிலையில், அதை வரவேற்க மனமின்றி திமுக – காங்கிரஸ் கூட்டணி எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களது இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.
