காதலிக்க மறுத்த மாணவியைக் கத்தியால் குத்திய வாலிபர்!

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி கிராமத்தில் 11ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தியதாகக் கூறப்படும் மாணவி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்து கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில் சி.முட்லூர் பகுதியை சேர்ந்த ஐயப்பன்(28) எலக்ரீஷன் வேலை செய்து வருகிறார். இவர் மாணவியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று மாணவியிடம் காதலை ஏற்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இன்று (26-07-26) மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற அவர் மீண்டும் காதலை ஏற்குமாறு கூறியுள்ளார். மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர், மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் மாணவியின் கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் குத்திவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து தகவலறிந்த சிதம்பரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு, வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஐயப்பனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Source link