முதலாவது காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 13 ஆண்கள், 10 பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய பெண்கள் அணி, நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் போட்டியில் உகாண்டா அணியை எதிர்கொண்டது. தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்தியா 41-18 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. முதலிரண்டு போட்டியில் மலேசியா (73-13), சிங்கப்பூர் (32-16) அணிகளை வீழ்த்திய இந்தியா, ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி, தனது கடைசி லீக் போட்டியில் இன்று நைஜீரியாவை சந்திக்கிறது.
