காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்; சரித்திர சாதனை படைத்தார் மீராபாய் சானு

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டில் மகளிர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தினார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் மகளிருக்கான பளு தூக்குதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில், 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்றார். ஸ்னாட்ச் மற்றும் க்ளீன் அன்ட் ஜெர்க் (snatch & clean and jerk) சுற்றுகளில் (85+105) 190 கிலோ எடையை தூக்கி, தங்கப்பதக்கத்தை வென்றார். நைஜீரியாவின் நியாங் வெள்ளியும், மலேசியாவின் ஹென்ரி வெண்கலமும் வென்றனர்.

ஆடவர் 60 கிலோ பிரிவில் ரிஷிகாந்தா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, 2026 காமன்வெல்த் தொடரில் பளுதூக்குதலில் இந்தியாவுக்குக் கிடைக்கும் 2வது பதக்கம் இதுவாகும். ஒட்டுமொத்தமாக 3 பதக்கத்துடன் இந்தியா, பதக்கப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா (24), இங்கிலாந்து (15), நைஜீரியா (7), ஸ்காட்லாந்து (5) ஆகிய நாடுகள் முதல் 4 இடங்களில் உள்ளன.

தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மீரபாய் சானுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

3வது தங்கம்

இன்று நடந்த போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், காமன்வெல்த் போட்டிகளில் தனது 3வது தங்கத்தை மீராபாய் சானு வென்றுள்ளார். இதற்கு முன்பாக, 2018 மற்றும் 2022ல் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் அவர் தங்கம் வென்றிருந்தார். 2014ல் கிளாஸ்கோவில் நடந்த போட்டியில் வெள்ளி வென்றார்.

Source link