காமராஜர் வழியில் லஞ்சமற்ற நிர்வாகம்; விஜய் அரசை புகழ்ந்து தள்ளிய ப. சிதம்பரம் – பின்னணி என்ன? – p chidambaram praises cm vijay corruption free governance

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட பலர் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

காமராஜர் ஆட்சி விஜய் ஆட்சி

விழாவை முன்னிட்டு சுமார் 2,000 மாணவர்கள் ஒன்றிணைந்து பெருந்தலைவர் காமராஜரின் பிரம்மாண்ட உருவப்படத்தையும் லஞ்சம் தவிர் – நெஞ்சம் நிமிர் என்ற விழிப்புணர்வு வாசகத்தையும் உருவாக்கினர். இந்த நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், காமராஜர் ஆட்சிக் காலத்தில் லஞ்சமற்ற நிர்வாகம் நடைபெற்றதாக நினைவுகூர்ந்தார். தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசும் லஞ்சத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

தவெக கூட்டணி உருவாகக்கூடாது? திட்டம் தீட்டும் எதிர்கட்சிகள்?

குறிப்பாக, பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் மற்றும் பணிமாறுதல் உள்ளிட்ட செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுவதாகவும் அவர் பாராட்டினார்.

விஜய் அரசை புகழ்ந்த ப. சிதம்பரம்

மேலும், இதுபோன்ற லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் அனைத்து அரசு துறைகளிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு முழுவதும் நேர்மையான மற்றும் லஞ்சமற்ற நிர்வாகம் உருவாக அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் ப. சிதம்பரம் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் தனிபெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சி அமைத்துள்ளது.முதல்வராக விஜய் பொறுப்பேற்று இரண்டு மாதங்களை நிறைவு செய்துள்ள நிலையில், ஊழற்ற நிர்வாகத்தை நடத்துவதே எனது இலக்கு என்று தெரிவித்து இருந்தார்.அந்த வகையில் தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈர்க்கும் துறைகளுல் முக்கியமானது இந்த பத்திரப்பதிவு துறை.

குறிப்பாக பத்திரப்பதிவு துறையில் ஊழல் முறைகேடுகள் பெருமளவில் நடைபெற்று வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.இது குறித்து முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது ஒரு நாளில் சுமார் 50 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டாலே, தற்காலிக பணியாளர்கள் மூலம் மட்டும் ரூ.50 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பத்திரப்பதிவு துறையில் முறைகேடு

இதன் மூலம் மாதந்தோறும் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை பொதுமக்களிடம் இருந்து சட்டவிரோதமாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் நேரடியாக இல்லாவிட்டாலும், அவர்களின் ஆதரவுடன் இந்த வசூல் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

மேலும், பல முறை ஆதாரங்களுடன் புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனைகள் பெயரளவிலேயே நடைபெறுகின்றன என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் அதற்கு துணைபோனவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஊழல் மற்றும் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்ந்து வருகிறது. மேலும் பத்திரப்பதிவு துறையில் லஞ்சத்தை ஒழிக்கக் வேண்டும் என்ற நோக்கில் ‘ஆன்லைன்’ இணையதளச் சேவை கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் , தங்களுடைய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யலாம் என்று முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு தெரிவித்து உள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

Source link