காரைக்குடி: காரைக்குடியில் நடைபயிற்சியின் போது மக்களை சந்தித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓட்டு சேகரித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க உள்ளது. இதனால் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினும் ஒவ்வொரு மாவட்டத்திற்காக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
காலை நேரத்தில் நடைபயிற்சியின் போது ஓட்டு சேகரிப்பதை முதல்வர் ஸ்டாலின் வழக்கமாக மேற்கொண்டார். அதுமட்டுமின்றி சாலையோர கடைகளில் அமர்ந்து டீ சாப்பிட்டு ஓட்டு சேகரித்தார்.
அதே பாணியில், இன்று (ஏப்.19) அதிகாலைநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், காரைக்குடி தொகுதி வேட்பாளருமான சீமான், காரைக்குடி பஸ் நிலையத்தில் நடைபயிற்சி மேற்கொண்டபடியே மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.
பொதுமக்களை சந்தித்து பேசிய அவர், மாற்று அரசியலுக்காக தனக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது சீமான் கூறுகையில், ”நிர்வாகத்தில் நிறைய ஊழல் ஆட்சி இருக்கிறது. அதனை ஒழிக்க வேண்டும்; ஒரு மாற்றம் வர வேண்டும்” என்றார்.
