‘கார்த்திகா அழுறா… என்ன நடந்ததுன்னு தெரியலை’: தேசிய கபடி வீரர் சுபா ராஜேஷ் வேதனை

முதலாவது காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 13 ஆண்கள், 10 பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய பெண்கள் அணி, நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் போட்டியில் உகாண்டா அணியை எதிர்கொண்டது. தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்தியா 41-18 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

முதலிரண்டு போட்டியில் மலேசியா (73-13), சிங்கப்பூர் (32-16) அணிகளை வீழ்த்திய இந்தியா, ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி, தனது கடைசி லீக் போட்டியில் இன்று நைஜீரியாவை சந்திக்கிறது.

களத்தில் அழுத கண்ணகி நகர் கார்த்திகா?  

இந்நிலையில், இந்த காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் களமாடி இருக்கும் கண்ணகி நகர் கார்த்திகா மைதானத்திலே கண்கலங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றை ஆட்டத்தின் போது, பயிற்சியாளருடன் ஏற்பட்ட வருத்தம் காரணமாக, கார்த்திகா களத்தில் கண் கலங்குவது போன்ற வீடியோ வெளியாகியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. 

வேதனை 

இந்த நிலையில், காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் கண்ணகி நகர் கார்த்திகா கண் கலங்கியது தொடர்பாக பேசிய இருக்கும் தேசிய கபடி வீரர் சுபா ராஜேஷ், இந்த சம்பவம் பற்றி வேதனை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கு வீடியோவில், “பயிற்சியாளர் கவிதா மேடம் அவர்களே, கடைசி நிமிடத்தில் களத்தில் இறக்கிவிட கார்த்திகா ஒன்று சின்ன பிளேயர் கிடையாது. தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ள நீங்கள் அவருக்கு கூடுதலாக வாய்ப்பு கொடுப்பீர்கள் என நினைத்தோம். ஆனால், நீங்கள் அதனை தரவில்லை. எல்லாருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் தான். ஆனால், கார்த்திகா தேசிய அளவில் 70 புள்ளிகளை பெற்ற வீராங்கனை.  

களத்தில் இருந்த கார்த்திகா அழுகிறார். அது ஏன் என்று தெரியவில்லை? நமது மண்ணின் கபடி தேவதை அழுகிற அளவுக்கு அங்கு ஏதோ ஒன்று நடந்துள்ளது. எல்லோரும் சொல்வது என்னவென்றால், முதலில் ஆடும் செவனில் இறக்கவில்லை. பிறகு நாங்கள் சொன்னவுடன் தான் இறக்கப்பட்டார் என்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து செல்லும் வீரர், வீராங்கனைகளை நாமே ஆதரவு கொடுக்கவில்லை என்றால் எப்படி? அவர் அர்ஜுனா விருது வெல்லும் அளவுக்கு தகுதி படைத்தார். இன்னும் அவர் 10 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடலாம்.

கவிதா மேடம், உள்ள என்ன நடக்கிறது? என்பதை கேட்கவோ பார்க்கவோ எனக்கு அதிகாரம் இல்லை. ஆனால், ஒரு சீனியர் வீரராக இது எனக்கு கஷ்டமாக இருந்தது. சிங்கப்பூர், மலேசிய அணிகளை நமது ஊர் அணிகள் வென்று விடும். அந்த அளவுக்கு கூட கார்த்திகாவுக்கு தகுதி இல்லையா? அவர் தான் இன்று நம்பர் ஒன் பிளேயர். அவரைப் பற்றி தான் இன்று அனைவரும் பேசுகிறார்கள். அதனால் யோசித்து முடிவு எடுங்கள்” என்று தேசிய கபடி வீரர் சுபா ராஜேஷ் கூறியுள்ளார்.   

Source link