கிணத்துக்கடவு: பொள்ளாச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான மற்றும் அஜாக்கிரதையான முறையில் கார் ஓட்டிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மேம்பாலம் அருகே, வேமாக இயக்கப்பட்ட காரில், மூன்று பேர், அதன் மேற்பகுதியில் அமர்ந்து சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் சென்றதுடன் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி, அச்சுறுத்தலை ஏற்படுத்தினர்.
மாவட்ட எஸ்பி பவன் ரெட்டி, உத்தரவின்பேரில், கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் கோவை பீளமேட்டை சேர்ந்த சரவணகுமார்(24), கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த சென்றாய பெருமாள் (24), பாரதி நகரை சேர்ந்த நிர்மல்குமார் (24), மதுரையைச் சேர்ந்த ராகுல்குமார் (19) ஆகியோர் அந்தக் காரில் இருந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது 211/2026, U/S 281, 125 மற்றும் 292 BNS r/w 184 MV சட்டத்தின் -ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் ஓட்டுச் சென்ற கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
