காலிறுதியில் தக்சினேஸ்வர்

புதுடில்லி: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் தக்சினேஸ்வர் முன்னேறினார்.

அமெரிக்காவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் உலகத் தரவரிசையில் 436 வது இடத்திலுள்ள 26 வயது, இந்தியாவின் தக்சினேஸ்வர், முன்னாள் ‘நம்பர்-72’ வீரர், குரோஷியாவின் போர்னா கோஜோவை எதிர்கொண்டார்.

முதல் செட்டை தக்சினேஸ்வர் 6-2 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து அடுத்த செட்டை 6-4 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 9 நிமிடம் நடந்த போட்டி முடிவில் தக்சினேஸ்வர், 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.

Source link