போபால்: மத்திய பிரதேசத்தில் கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ராஜ்கர் மாவட்டத்தில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது. இதில் காரின் உள்ளே இருந்த 5 பேர் நீரில் மூழ்கினர். இதனைக் கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர், உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு மீட்பு குழுவினருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, தீயணைப்பு மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், 5 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
