புதுடில்லி: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் புதுடில்லியில் தொடங்கியது.
காவிரி நதிநீர் பங்கீட்டை முறைப்படி நிர்வகிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டன. இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதிநீர் பங்கீடு குறித்து ஆலோசித்து வருகின்றன.
இதுவரை 52 கூட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், 53வது ஆணையக் கூட்டம் புது டில்லியில் இன்று தொடங்கியது. கூட்டத்திற்கு ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமை ஏற்றுள்ளார்.
தமிழகம் சார்பில் நீர்வளத்துறை முதன்மை செயலாளர் சத்திய பிரதா சாகு, காவிரி தொழில் நுட்ப குழுத்தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர். கர்நாடகா தரப்பிலும் அம்மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஜூன் 23ம் தேதி கடைசியாக கூடியது.
