பல லட்சங்களுக்கு விற்பனை செய்யப்படும் அரிய வகை தங்க ஐஸ்கிரீம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
ஜப்பானில் உள்ள பிரபல நிறுவனமான ’செல்லாட்டோ’ உருவாக்கியுள்ள ’பியா-குயா’ என்ற ஐஸ்கிரீம் உலகின் மிக உயர்ந்த விலை கொண்டதாக ’கின்னஸ் உலக சாதனை’யில் இடம்பெற்றுள்ளது. இந்த வகை ஐஸ்கிரீம், ஒரு கரண்டியின் (ஸ்கூப்) விலை 8,73,400 ஜப்பானிய ’யென்’னிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 லட்சம் முதல் ரூ.5.5 லட்சம் வரை இருக்கும்.
இந்த உயர்வகை ஐஸ்கிரீல், இத்தாலியின் அல்பா நகரிலிருந்து கொண்டுவரப்படும் மிக அரிய வகை வெள்ளை நிற டிரஃபில், பார்மஜானோ ரெஜியானோ சீஸ் மற்றும் சேக் லீஸ் மற்றும் உணவில் சேர்க்கக்கூடிய தங்கம் ஆகியவை கலந்து உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த ஐஸ்கிரீமின் சுவையை சரியான முறையில் கொண்டு வர சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய உயர்தர பொருட்களை ஒரே உணவில் கொண்டுவரும் முயற்சியாக, இந்த ஐஸ்கிரீம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
