கிருஷ்ண ஜெயந்தி அன்று முறையாக விரதமிருந்து வழிபடுவது எப்படி..? நாள் முழுவதும் என்ன செய்ய வேண்டும்..? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களில், எட்டாவது அவதாரமான கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்த புனித தினமே கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி மற்றும் ஸ்ரீஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் பக்தர்களால் விரதமிருந்து போற்றி வழிபடப்படுகிறது. இத்திருநாளில் நாம் வைக்கும் வழிபாட்டின் மூலமாக, சாட்சாத் பகவான் ஸ்ரீகிருஷ்ணரே நமது இல்லங்களுக்கு நேரில் வருகை தந்து அருள்பாலிப்பதாக ஐதீகம் நிலவுகிறது. குறிப்பாக, மழலைச் செல்வம் இல்லாத தம்பதியினர் இந்நாளில் மனமுருகி விரதமிருந்து கண்ணனை வழிபட்டால், அந்தக் கண்ணபிரானே அவர்களுக்கு அழகான குழந்தையாக வந்து அவதரிப்பார் என்பது காலம் காலமாகத் தொடரும் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

புராணங்களின்படி பகவான் கிருஷ்ணர் நள்ளிரவு வேளையில் அவதரித்தவர் என்பதால், கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டைக் காலைப் பொழுதை விட மாலை மற்றும் இரவு நேரங்களில் நடத்துவதே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. நாள் முழுவதும் தூய மனதுடன் விரதமிருந்து, மாலையில் பூஜையைத் தொடங்கி நடுநிசி வரை பக்திப் பாடல்களுடன் வழிபட வேண்டும். மறுநாள் அதிகாலையில் கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதங்களை உண்டு விரதத்தை நிறைவு செய்வதே மரபு. அதேபோல், வளரும் குழந்தைகளுக்குக் கண்ணனின் குறும்புகளையும், தீய சக்திகளை அழித்த கிருஷ்ண லீலைகளையும் கதைகளாகக் கூறி அவர்களின் மனதில் நற்பண்புகளை விதைப்பதற்கும் இந்நாள் உகந்ததாக அமைகிறது.

இத்திருநாளில் அதிகாலையிலேயே வீட்டை தூய்மை செய்து வாசலில் மாவிலை தோரணங்கள் கட்டி, பச்சரிசி மாவால் வண்ணக் கோலங்களிட்டு வீட்டை தெய்வீக மணம் கமழச் செய்ய வேண்டும். பூஜை அறையை மலர்களால் அலங்கரித்து, அரிசி மாவினால் பச்சிளம் குழந்தையின் பாதங்களை வீட்டு வாயிலில் தொடங்கி பூஜை அறை வரை வரைய வேண்டும். இது ஆலிலை கிருஷ்ணனின் பிஞ்சு பாதங்கள் நம் வீட்டுக்குள் நுழைந்து ஆசியளிப்பதை குறிக்கிறது. தொடர்ந்து, கிருஷ்ணரின் சிலை அல்லது படத்திற்கு மலர் மாலைகள் சூட்டி, அவருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய், சர்க்கரை, அவல், முறுக்கு, உப்பு சீடை, இனிப்பு சீடை, அதிரசம் மற்றும் தேன்குழல் உள்ளிட்ட பாரம்பரிய பலகாரங்களை படையலிட்டு ஆராதிப்பதன் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சியும் சகல ஐஸ்வர்யங்களும் நிலைத்திருக்கும்.

புதுச்சேரி வருகிறார் நித்யானந்தா..? மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை..!! போலீஸ் பாதுகாப்பு கேட்டு முதல்வரிடம் மனு..!!

Next Post

Fri Sep 4 , 2026

கிருஷ்ண பரமாத்மாவின் அவதார திருநாளான கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஸ்ரீஜென்மாஷ்டமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணையும் வேளையில் கிருஷ்ணர் அவதரித்தார் என்பது ஐதீகம். வழக்கமாக இந்த இரண்டும் ஒரே நாளில் இணைந்து வருவது அரிது என்றாலும், இந்த ஆண்டு அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் பல மணி நேரம் ஒன்றாக இணைந்து வெள்ளிக்கிழமையில் அமைவது கூடுதல் விஷேசமாக […]

Krishnar 2026 2

Source link