குடியேறிகளால் பற்றி எரிகிறது பிரான்ஸ்; எல்லைகளை மூடுமாறு டிரம்ப் யோசனை

வாஷிங்டன்; பிரான்ஸ் நாட்டின் தற்போதைய நிலைக்கு, குடியேற்றமே காரணம், எல்லைகளை மூடுங்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறார்.

அன்றாட வாழ்க்கை செலவினங்கள் உயர்வு, சமநிலையற்ற பொருளதாரம் போன்றவற்றால் பிரான்சில் கலவரங்கள் வெடித்துள்ளது. தொடக்கத்தில் மாணவர்கள் எதிர்ப்பாக உருவெடுத்த இந் நிகழ்வு, பின்னர் வீதிகளில் லட்சக்கணக்கான மக்கள் திரளும் நிலையாக மாறியது.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெடித்த கலவரங்களால் வணிக நிறுவனங்கள், கட்டடங்கள் சூறையாடப்பட்டன. வாகனங்கள், அரசு அலுவலகங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதற்கு முன் இல்லாத அளவுக்கு பிரான்ஸ் நாடானது, பற்றி எரிந்து வருகிறது.

பிரான்சின் தற்போதைய நிலை உலகநாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்திய நிலையில், அந்நாட்டில் குடியேறியவர்களே இதற்கு காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவு;

பிரான்ஸ் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதயத்தில் வெறுப்புடன், பல்வேறு பகுதிகளில் இருந்து அங்கு குடியேறிய மக்கள் மகத்தான அந்நாட்டை சிதைத்து விட்டனர். நிலைமை எல்லை மீறும் முன்னரே, எல்லைகளை மூடி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள்.

இவ்வாறு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

Source link