குதிரை பேரத்தால் பலத்தை உருவாக்குவது கெட்ட செயல்: மா.கம்யூ., சண்முகம் கருத்து

லோக்சபாவில், மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி பெற, பிற கட்சிகளை உடைப்பது, எம்.எல்.ஏ., – எம்.பி.,க்களை, விலைக்கு வாங்குவது போன்ற செயல்களை பா.ஜ., செய்து கொண்டிருக்கிறது. மூன்றில் இரு பங்கு எம்.பி.,க்களை பெற்று, மதசார்பற்ற நாடு என்பதற்கு பதில், மதசார்புள்ள நாடு என்று கூட, அரசியல் சாசனம் திருத்தப்படும்.
குதிரை பேரம் வாயிலாக, ஆதரவு பலத்தை உருவாக்கிக் கொள்ளும் கெட்ட நடவடிக்கையில், பா.ஜ., ஆட்சியாளர்கள் ஈடுபடுகின்றனர். தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டால் கூட, ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், ‘நாங்கள் எதிர்பார்த்த திருத்தங்கள், மசோதாவில் இருந்தால், எதிர்க்க மாட்டோம்’ என, தி.மு.க., அமைப்பு செயலர் பாரதி கூறியுள்ளார். அந்த மசோதாவில் என்ன வருகிறது என தெரிவதற்கு முன், அவர், அப்படி கூற, என்ன காரணம்?
– சண்முகம் மாநில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Source link