குமரகுருபரன் ஐஏஎஸ் மாற்றம்.. இந்த இரண்டு மாஜிக்களுக்கும் வைக்கப்பட்ட செக்? முதல்வர் நடவடிக்கையால் சிக்கலில் திமுக – kumaragurubaran ias transfer for two former dmk minister to corruption allegations

தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த குமரகுருபரன் IAS அவர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த பணியிட மாற்றத்திற்காக காரணம் என்ன? குறித்து விரிவாக பார்க்கலாம்.

பல்வேறு புகார்களில் சிக்கிய அதிகாரிகளைத் தேடிக் கண்டுபிடித்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கும் பணியைத் தவெக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. உமாநாத், முருகானந்தம், தற்போது குமரகுருபரன் வரை பல முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளும், சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகளும் அடுத்தடுத்து மாற்றப்பட்டுள்ளனர்.அதில் குமரகுருபரன் IAS ஒருவர்.
தமிழ்நாடு அரசில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான குமரகுருபரனிடமிருந்த முக்கிய பொறுப்புகள் அண்மையில் மாற்றப்பட்டிருப்பது, நிர்வாக வட்டாரங்களிலும் அரசியல் களத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சேகர்பாபு மற்றும் மூர்த்தி ஆகியோரின் தீவிர விருப்பத்தின் பேரில் பொறுப்புக்கு வந்தவர்?

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை ஆகிய முக்கிய துறைகளில் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்த இவர், திமுக ஆட்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு மற்றும் மூர்த்தி ஆகியோரின் தீவிர விருப்பத்தின் பேரில் அப்பொறுப்புகளில் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்துறைகளில் நிலப் பத்திரப்பதிவு, போலி ஆவணங்கள் மற்றும் கோவில் நிலங்கள் தொடர்பான பல்வேறு விவகாரங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

பழனி கோவில் நில மோசடி விவகாரம்

குறிப்பாக சமீபத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான பல நூறு கோடி மதிப்பிலான நிலத்தை, கொடைக்கானலில் இருந்து மாற்றப்பட்ட மாற்று சார்-பதிவாளர் மூலம் அவசர அவசரமாகப் பத்திரப்பதிவு செய்த சர்ச்சை இவருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சிக்கல்கள்

பத்திரப்பதிவுத் துறையில் 150 ஆண்டு கால பழமையான ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின்போதே ஆவணங்களைச் சரிபார்க்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதால், பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.

குமரகுருபரன் திடீர் பணியிடமாற்றம்

குமரகுருபரனின் அதிகாரக் குறைப்பு மற்றும் இடமாற்றம் என்பது, தவெக முன்வைக்கும் ஊழல் எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. மேலும்,இந்த மாற்றம் முன்னாள் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மூர்த்தி ஆகிய இருவருக்கும் மறைமுகமாக வைக்கப்பட்ட ‘செக்’ என்றும், முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் மீதான நடவடிக்கையின் தொடக்கம் என்றும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – மூர்த்திக்கும் தொடரும் சிக்கல்

சமீபத்தில் முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியது குறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையின் சம்மனைத் தொடர்ந்து சேகர்பாபு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். குறிப்பாக ஒரு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை தொடங்கினாலே, அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வழக்குகள் பாயும் சூழல் உருவாகும்.

மறுபுறம், பத்திரப்பதிவுத் துறையின் முக்கிய அதிகாரியாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி குமரகுருபரன் மாற்றப்பட்டதன் மூலம், முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கும் மறைமுகமாகச் செக் வைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழக வெற்றிக் கழக அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கைகள், ஊழல் புகார்களில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரும் வியூகமாகவே பார்க்கப்படுகிறது.

ஜெ. குமரகுருபரன் ஐஏஎஸ் பின்னணி ?

மே 29, 1979-இல் பிறந்த இவர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்தவர். பி.இ பட்டதாரியான இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் வல்லவர். 2004-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடரில் தேர்வாகி, தேனி உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கினார். ஆண்டுகள் அனுபவம் கொண்ட நேர்மையான அதிகாரி; ஆட்சியர், ஆணையர், இயக்குநர் எனப் பல பொறுப்புகளை வகித்தவர். 2024 திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி ஆணையராவும், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை செயலாளராக பணிபுரிந்துள்ளார். நாமக்கல் ஆட்சியர், செய்தித் துறை இயக்குநர், சிப்காட் (SIPCOT) எம்.டி, சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளார்.
Source link