இன்றைய நவீன காலக்கட்டத்தில் நாம் முன்பு பயன்படுத்திய பொருட்களுக்கு மாறுதலாக பல புதிய பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். முன்பு ஒயர் வைத்த செவி பொருத்திகளை (bluetooth) பயன்படுத்தி வந்தோம். ஆனால், தற்போது ஒயர்லெஸ் செவி பொருத்திகளை பயன்படுத்தி வருகிறோம். இது பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும் சில சமயங்களில் காணாமல் போனால் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான செயலாகவே உள்ளது.
அவங்க நம்மல மாதிரி நார்மல் பீப்பிள் இல்ல: திருமண மோதிரத்தை வாங்கமாட்டேன், செய்வேன்; காதலிக்காக தங்கத்தை தேடி ஓடிய இளைஞர்
ஆனால், தற்போது இந்த வேலையை ஏ.ஐ சுலபமாக்கி உள்ளது. அதாவது, சிறிய ஒயர்லெஸ் இயர்பட் ஒன்று பையிலிருந்து நழுவி, வெள்ளைக் கூழாங்கற்கள் நிறைந்த தரைப்பகுதியில் விழுந்தபோது அதை தேடி கண்டுபிடிக்க ஏ.ஐ-யை பயன்படுத்திய சுவாரசியமான சம்பவத்தை நெட்டிசன் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
ரெடிட் தளத்தில் பதிவிட்டுள்ள அந்தப் பயனர், சுமார் 10 நிமிடங்கள் தேடியும் இயர்பட் கிடைக்காததால், சலிப்படைந்து சாட்ஜிபிடி-யின் உதவியை நாடியுள்ளார். ஆச்சரியப்படும் விதமாக, 5 நிமிடங்களுக்குள் அந்த ஏ.ஐ மாடல் இயர்பட் இருக்கும் இடத்தை கச்சிதமாக கண்டுபிடித்துக் கொடுத்துள்ளது.
நடந்தது என்ன?
தான் அணிந்திருந்த போஸ் ஒயர்லெஸ் இயர்பட்களில் ஒன்று ஹூடி பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்துவிட்டதாக அந்த பயனர் தெரிவித்துள்ளார். போஸ் இயர்பட்கள் காதுக்குள் இருக்கும் வரை மட்டுமே போனுடன் இணைப்பில் இருக்கும் என்பதால், புளூடூத் மூலம் சத்தமாக பாட்டு போட்டு தேடும் சாதாரண வழியைப் பயன்படுத்த முடியாமல் போனது.
வெள்ளைக் கூழாங்கற்கள் நிறைந்த கடலுக்குள் ஒரு சிறிய வெள்ளை நிற இயர்பட்டை என்னால் கண்டுபிடிக்கவே முடியாது என்பதைப் புரிந்துகொண்டேன். நான் பல விஷயங்களுக்கு சாட் ஜிபிடி-யைப் பயன்படுத்துபவன். வீணாக நானே தேடிக் கொண்டிருப்பதை விட, ஏன் ஏ.ஐ-யிடம் உதவி கேட்கக்கூடாது என்ற யோசனை திடீரெனத் தோன்றியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாட் ஜி.பி.டி செய்த அற்புதம்
உடனடியாக அந்த பகுதியின் புகைப்படத்தை எடுத்து சாட் ஜி.பி.டி-யில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை நுணுக்கமாக ஆராய்ந்த சாட் ஜிபிடி, இயர்பட் சரியாக எந்தப் புள்ளியில் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. படம் பதிவேற்றியதிலிருந்து இயர்பட்டை கையில் எடுக்கும் வரை 5 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகியுள்ளது. “சாட் ஜி.பி.டி இல்லையென்றால் இதை என்னால் கண்டுபிடித்திருக்கவே முடியாது” என்று அவர் நெகிழ்ந்துள்ளார்.
இணையத்தில் குவியும் வரவேற்பு
2,800-க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்ற இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “ஏ.ஐ-யின் இமேஜ் ரெகக்னிஷன் திறன் மிகவும் முன்னேறியுள்ளது. ஒரு புகைப்படத்தை பெரியதாக்கி, வெவ்வேறு கோணங்களில் ஃபில்டர்களைப் பயன்படுத்தித் தேடும் சாமர்த்தியம் ஏ.ஐ-க்கு உண்டு” என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.
“தேவையற்ற விஷயங்களுக்குப் பயன்படுத்துவதால் மட்டுமே ஏ.ஐ வீண் என்று சொல்வதை நிறுத்த வேண்டும். இதோ எவ்வளவு அற்புதமான பயன்பாடு” என மற்றொருவர் பாராட்டியுள்ளார்.
