கேரளாவில் ஆக., 1 வரை கன மழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மூணாறு: கேரளாவில் ஆக., 1 வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் பல்வேறு மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

இம்மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை ஜூன் 4ல் துவங்கியது. வழக்கமான மழை பெய்யாமல் போக்கு காட்டியது. நேற்று முதல் மழை வலுவடைந்தது. ஆக., 1 வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதால் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்தது.

ஆரஞ்ச் அலர்ட்:

நாளை (ஜூலை 30) கோழிகோடு, வயநாடு, கண்ணூர்.

நாளை மறுநாள்(ஜூலை 31) பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு.

ஆக., 1ல் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது.

மஞ்சள் அலர்ட்:

நாளை (ஜூலை 30) பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம்.

நாளை மறுநாள்(ஜூலை 31) திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிகோடு, வயநாடு.

ஆக., 1ல் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிகோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு.

ஆக. 2ல் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, கோழிகோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்தது.

Source link