கேரளாவில் ரயிலை கவிழ்க்க 3 இடத்தில் பிளான்; பீஹார் வாலிபர் கைது

நமது நிருபர்

கேரள மாநிலம் பாலக்காடு – சொரனூர் ரயில் வழித்தடத்தில், ஒத்தப்பாலம், சொரனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே மான்னனூர், காரக்காடு மற்றும் அதன் அருகே மற்றொரு இடம் என மூன்று இடங்களில் ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் ஸ்லாப், தண்டவாள துண்டுகள், சிமெண்ட் மூட்டை ஆகியவற்றை அகற்றினர்.

அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சுக்லால் மரியா, 28, என்ற வாலிபரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Source link