கையெடுத்து கும்பிட்ட அஜித், ஓடி வந்து கட்டிப்பிடித்த முதல்வர் விஜய்: தளபதிக்கு காத்திருந்த சர்பிரைஸ்

ரேஸ் பார்த்த விஜய் : லண்டனில் நடந்து வரும் மிஷலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயத்தில் கலந்து கொண்டு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார் அஜித் குமார். அரசு வேலை காரணமாக லண்டன் சென்ற விஜய் தன் நண்பர் அஜித் குமார் கார் ஓட்டுவதை பார்க்க பந்தயம் நடந்த சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டிற்கு சென்றார்.

தமிழக முதல்வர் வந்திருப்பதை அறிந்த போட்டி ஏற்பாட்டாளர்களோ விஜய் கையில் பச்சைக் கொடியை கொடுத்து கார் பந்தயத்தை துவக்கி வைக்குமாறு கூறினார்கள். தனக்காக நண்பர் விஜய் வந்ததை பார்த்த அஜித் குமார் கையெடுத்து கும்பிட்டார். அதை பார்த்த விஜய்யோ க்யூட்டாக ஓடிச் சென்று அஜித்தை கட்டிபிடித்துக் கொண்டார். விஜய்ணாவை இப்படி சந்தோஷமாக பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது என அவரின் ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

அஜித் பரிசு: விஜய்க்காக தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியின் நிறத்தில் ரேஸ் சூட் ஒன்றை பரிசாக கொடுத்தார் அஜித் குமார். அவரும், விஜய்யும் ரேஸ் சூட்டில் ஒரே மாதிரியான காலணிகள் அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகிவிட்டது. ரேஸ் சூட்டில் விஜய்ணா ரொம்ப அழகாக இருக்கிறார் என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.

பந்தயம் துவங்கும் முன்பு அஜித் குமார் காரில் அமர்ந்திருந்தார் விஜய். பின்னர் அஜித்துக்கு கை கொடுத்து வெற்றியோடு வாங்க என்று வாழ்த்தி அனுப்பினார். அது மட்டும் அல்ல நண்பர் ஜோசப் விஜய்யை தன் ரேஸ் காரில் அமர வைத்து நான்கு ரவுண்டு வந்திருக்கிறார் அஜித் குமார்.

அஜித் பக்கம் தளபதியன்ஸ்: விஜய்க்கும், அஜித் குமாருக்கும் ஆகவே ஆகாது என்று வருடக் கணக்கில் ரசிகர்கள் பேசி வந்த நிலையில் லண்டனில் அவர்களின் நட்பை பார்த்த தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். நீங்கள் என்று மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் என்று சொல்லி அவருக்கு நன்றி தெரிவித்தீர்களோ அன்றே நாங்கள் உங்களின் ரசிகர்களாகிவிட்டோம். இனி உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

ஆனால் அஜித் ரசிகர்கள் தான் அதிருப்தியில் இருக்கிறார்கள். மாண்புமிகு முதலமைச்சரா என்று குமுறிய அவர்கள், தற்போது லண்டனில் விஜய் , அஜித்தை சேர்த்து பார்த்த பிறகு மேலும் அதிருப்தி அடைந்துள்ளனர். இத்தனை ஆண்டுகளாக உங்களை தன் ரசிகர்களை வைத்து மட்டம் தட்டிய விஜய் பெரிதாக போய்விட்டார். அவர்களை சமாளித்து வந்த நாங்கள் முக்கியம் இல்லாதவர்களாக ஆகிவிட்டோம்.

விஜய், த்ரிஷா: போதும் ஐயா, உங்களுக்கு ரசிகர்களாக இருந்தது. நாங்கள் எங்கள் குடும்பத்தை கவனிக்கப் போகிறோம் என தெரிவித்துள்ளனர் அஜித் குமார் ரசிகர்கள். ராஜா கிருஷ்ணா மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் த்ரிஷா கிருஷ்ணன் அதன் ஷூட்டிங்கிற்காக லண்டனில் இருக்கிறார்.

இந்நிலையில் த்ரிஷாவும் அஜித்தின் கார் பந்தயத்தை முதல்வர் விஜய்யுடன் சேர்ந்து பார்த்து ரசித்தார். அவர்கள் இருவரும் பால்கனியில் நின்று ரேஸை பார்த்த வீடியோவும் வெளியாகியிருக்கிறது. லண்டன் ரேஸில் விஜய்ணா உடன் சங்கீதா அண்ணியை பார்க்க விரும்புகிறோம் என்று தளபதியன்ஸ் கூறி வந்தார்கள். ஆனால் சங்கீதா சொர்ணலிங்கத்தை ரேஸ் நடந்த இடத்தில் பார்க்க முடியவில்லை.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

கணவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு தான் தொடர்ந்த வழக்கை ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி அவர் வாபஸ் பெற்றார். இருந்தாலும் அவரை விஜய்யுடன் சேர்ந்து பார்க்க முடியவில்லையே என்பதே அவரின் ரசிகர்களின் கவலையாக உள்ளது.

Source link