கொட்டி தீர்த்த கனமழை! திருநெல்வேலியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருநெல்வேலி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவித்திருக்கிறார்.

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்பதால், தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.