கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தவில் நடைபெற்ற் துர்கா பூஜையில் பந்தல் சரிந்து விழுந்துள்ளது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூட்டநெரிசலில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜை நடைபெற்று வந்தது. மேற்கு கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த துர்கா பூஜாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு பூஜை பந்தல் திடீரென சரிந்து விழுந்துள்ளது. இதையடுத்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கம் அடைந்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம் அடைந்த நிலையில், 17 பேர் உயிரிழந்து இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
