கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு மருத்துவமனையில் திடீர் அனுமதி – kolathur constituency tvk mla vs babu admitted in hospital

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு திடீரென கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்ட காரணத்தால் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ். பாபு . கடந்த சில வாரங்களாக நடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இவர் பங்கேற்றார். இப்படியான நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தவெக சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ். பாபு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக போட்டியிட்டவர் வி.எஸ். பாபு. தவெக எம்எல்ஏவாக செயல்பட்டு வரும் இவர் சட்டமன்ற படஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்றார். இதனிடையில் அவருக்கு திடீரென கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Source link