கொளத்தூர் தோல்வி.. எஸ்.வி.பாபுவிற்கு எதிராக செக் வைத்த மு.க. ஸ்டாலின் – 14 EVM-கள் மீண்டும் பரிசோதனை – evms used in 14 polling booths in kolathur during the assembly election 2026 are set to be verified today

கடந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூரின் 14 பூத்களில் பயன்படுத்தப்பட்ட EVM வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று சரிபார்க்கப்பட உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த முடிவைத் தொடர்ந்து, தொகுதியில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) தொடர்பாக சந்தேகம் இருப்பதாகக் கூறி, தேர்தல் ஆணையத்திடம் அவர் மனு அளித்திருந்தார்.

14 வாக்குச்சாவடிகளில் ஆய்வு

கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை மீண்டும் பரிசோதிக்க வேண்டும் என்றும், அவை முறையாக செயல்பட்டதா என்பதை தங்கள் முன்னிலையில் நிரூபிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். அந்த மனுவை தேர்தல் ஆணையம் சட்டப்படி பரிசீலித்து, ஆய்வுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கொளத்தூரில் எதிர்பாராத தோல்வி

2011, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த மு.க.ஸ்டாலின், கொளத்தூரை திமுகவின் வலுவான கோட்டையாக மாற்றியிருந்தார். இந்த முறையும் அவர் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் இருந்தது. ஆனால் தேர்தல் முடிவில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபு 82,997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மு.க.ஸ்டாலின் 74,022 வாக்குகள் பெற்று சுமார் 8,700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.

நாளை நடைபெறும் ஆய்வு

தேர்தல் ஆணையத்தின் நடைமுறையின்படி, இன்று காலை 9 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அந்த 14 வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீண்டும் ஆய்வு செய்யப்பட உள்ளன. இதில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களது அங்கீகாரம் பெற்ற முகவர்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரி வாக்குப்பதிவும் நடைபெறும்

ஆய்வின் ஒரு பகுதியாக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீண்டும் அமைக்கப்பட்டு மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்படும். இதில் விருப்பமான சின்னங்களுக்கு வாக்குகள் பதிவு செய்து, அதன் முடிவுகள் சரியாக பதிவாகிறதா என்பது சோதிக்கப்படும். இதன் மூலம் இயந்திரங்களின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும்.

அடுத்தகட்ட நடவடிக்கை?

இந்த ஆய்வில் ஏதேனும் தொழில்நுட்ப குறைபாடு அல்லது முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டால், அதனை அடிப்படையாகக் கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி, மொத்தம் 14 வாக்குச்சாவடிகளுக்கான விண்ணப்பத்தையும் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். தற்போது இந்த ஆய்வு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Source link