சட்ட மேலாவைத் தேர்தலில் பாஜவின் கோட்டையான நாக்பூரை, தன் வசப்படுத்தியது காங்கிரஸ். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர சட்ட மேலாவைத் தேர்தலில், நாக்பூர் பட்டதாரிகள் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமேலவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை (27-10-26) தொடங்கியது. சுமார் 41 மணி நேர இழுபறிக்குப் பிறகு வியாழக்கிழமை (29 -10-26) அதிகாலையில் முடிவடைந்தது. இந்த முடிவுகளின் படி, காங்கிரஸ் வேட்பாளர் அபிஜித் கோவிந்தராவ் வஞ்சரி 67,231 வாக்குகள் பெற்று 3,271 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
நாக்பூர் என்பது பாஜகவின் பலம் வாய்ந்த தொகுதியாகப் பார்க்கப்படுகிறது. முதல்வர் பட்னாவிஸின் சொந்த ஊராகவும், மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களவைத் தொகுதியாகவும் இருப்பதால், இங்குக் காங்கிரஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பெற்றுள்ள இந்த வெற்றி, அம்மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைமையகமும் நாக்பூரில் தான் அமைந்துள்ளது.
இத்தேர்தலில் காங்கிரஸ், சரத்பவாரின் என்சிபி மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிக் கூட்டணி மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 5 சட்ட மேலவை இடங்களில் 3 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆளும் தரப்பான மகாயுதி (பாஜக) கூட்டணி 2 இடங்களை வென்றுள்ளது. ஆளும் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
