சென்னை: கறிக்கோழிக்கு தீவன கட்டுப்பாடு நெறிமுறைகளை பின்பற்றாததை கண்டித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 31ம் தேதி முதல் கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து அதன் தலைவர் துரைராஜ் கூறியதாவது: பண்ணைகளிலிருந்து கறிக் கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு 8 -12 மணி நேரத்துக்கு முன்பே தீவனம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
ஆனால், கோழி உற்பத்தியாளர்கள் தீவன கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதில்லை. இதுதொடர்பாக கால்நடை பராமரிப்பு துறையிடமிருந்து கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளன.
ஆனால், தொடர்ந்து இந்த பிரச்னை இருந்து வருகிறது. கறிக்கோழியின் எடையை அதிகப்படுத்தி காட்டுவதற்காக விற்பனைக்கு அனுப்பும் கோழிகளுக்கு கடைசி வரை தீவனம் கொடுக்கப்ப டுகிறது.
இதனால், இறைச்சியோடும், கோழிக் கழிவுகளோடும் செறிக்காத தீவன துகள்கள் கலந்து சுற்றுச்சூழல் மாசு மற்றும் இறைச்சி வணிகர்களுக்கு பொருளாதார இழப்பும் ஏற்ப டுகிறது.
அதனால், கறிக்கோழிகளுக்கு 12 மணி நேரத்துக்கு முன்னரே தீவனம் வழங்குவதை நிறுத்தும் நெறிமுறையை அரசு கண் காணிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
கறிகோழிக்கு தீவன கட்டுப்பாடு நெறிமுறைகளை செயல் படுத்தாததற்கு எதிர்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 31 முதல் கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு
