ஜெகன்நாதர் தேர்த்திருவிழா பாரம்பரியம் மிக்க விழாவாக உலகம் முழுவதும் கிருஷ்ண பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கோவையில் இந்த தேர்த் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தேர்நிலை திடலில் இருந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில், ஜெகன்நாதர், பலதேவர், சுபத்ராதேவி ஆகியோர் எழுந்தருளினர்.
குட்டிகளுடன் வனப் பகுதியில் இருந்து வெளிவந்த யானைகள்… வாகன ஓட்டிகள் அச்சம்; வனத்துறையினர் எச்சரிக்கை
பக்தர்கள் சூழ மேள தாளங்கள் முழங்க, தேர் ராஜவீதி, ஒப்பணக்காரவீதி, வைசியாள்வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக வலம் வந்து மீண்டும் தேர்நிலை திடலை வந்தடைந்தது. விழாவில் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பறைசாற்றும் வகையில் இசைக்குழுவினரின் சிறப்பு பஜனையும், ஹரிநாம சங்கீர்த்தனமும், நடன நிகழ்ச்சிகளும் நடந்தது.
மேலும், இந்த தேரோட்டத்தின் போது அத்தார் ஜமாத் பள்ளிவாசலில் ஜெகந்நாதருக்கு ஜமாத் சார்பில் பேரிச்சம்பழம் கொடுக்கப்பட்டது. இதனை பெற்றுக் கொண்ட சாமியார்கள் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்வு மதங்களை கடந்த நிகழ்வாக பார்க்கப்பட்டது.
பி. ரஹ்மான்.
