கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியிருந்தது.
மதியம் 2 மணி முதல் கோவையில் பல பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்தது. காந்திபுரம், உக்கடம், கலெக்டர் அலுவலகம், மாநகர பகுதிகள் ஆர்எஸ்புரம்,குனிமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதித்தது.
( பிற்பகல் 3:30 மணியளவு)
மழை அளவு
ஆர்.எஸ்.புரம் – 7.7 செமீ
குனியமுத்துார் – 4.98 செமீ
சாய்பாபா காலனி – 4.28 செமீ
வடவள்ளி- 4.76 செமீ
வெள்ளலுார்- 4.7 செமீ
ஒத்தக்கால் மண்டபம்- 4.1செமீ
மதுக்கரை- 1.8செமீ
காரமடை- 1.5செமீ
கவுண்டம்பாளையம் -1.5செமீ
ஒண்டிபுதுார்- 2.34செமீ
காந்திபுரம்- 7.74செமீ
சிங்காநல்லுார்- 2.0செமீ
