கோவை: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த திமுக, காங்கிரசுக்கு பெண்கள் யாரும் ஓட்டுப்போடக்கூடாது என தமிழக

கோவை: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த திமுக, காங்கிரசுக்கு பெண்கள் யாரும் ஓட்டுப்போடக்கூடாது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: அண்ணாமலை பேசியதாவது: ஐந்தாண்டு காலம் தமிழகத்தில் நடக்கும் காட்டாட்சியை முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறோம். தேர்தல் நாள் எப்போதுவரும், பெண்கள் குழந்தைகளுக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என காத்திருந்தோம்.

போதை புழக்கத்தில் இருந்து இளைஞர்களை எப்படி காப்பாற்றுவோம் என எதிர்பார்த்தோம். தமிழகத்தில் திமுக ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிந்து, அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக முதல்வர் பதவியில் அமர்ந்து தமிழக மக்களுக்கு நல்லாட்சி அளிப்பார் என அனைவரும் காத்திருக்கின்றனர்.

மதுராந்தகத்தில் ஆரம்பித்தோம் . கட்சிகளாக இருந்தோம். கூட்டணி அமைத்தோம். மதுரைக்கு வந்தோம். ஒன்றாக இணைந்தோம்.திருச்சிக்கு சென்றோம். மக்களிடம் நாம் என்னவென சொன்னோம். நாக்ரகோவிலில் நம்முடைய வலிமையை காட்டினோம். கோவையில் வெற்றிக்கான பறைசாற்றலை செய்து கொண்டிருக்கிறோம்.

மதுராந்தகத்தில் ஆரம்பித்து கோவை வரை மோடி நம்மை வழிநடத்துகிறார். ஏப்.,23 ல் அரசியல் களத்தில் முக்கியமான தேர்தல். குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புகிறோம். கஞ்சா புழக்கத்தை கட்டுப்புடுத்துகிறேம். ஏழைகளுக்கான ஆட்சியை நடத்துகிறோம். திமுகவிற்கோ, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஓட்டைக்கூட அளிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

பெண்களை மையப்படுத்தி

2009 நவ., மாதத்தில் குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்து முன்னோடியாக இருந்தவர் பிரதமர் மோடி. அதேபோல் 2016 பிப்.,யில் உள்ளாட்சி பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தது ஜெயலலிதா. இரண்டு பேரும் பெண்களை மையப்படுத்தி ஆட்சி நடத்தி உள்ளனர். பார்லிமென்டில் பெண்களுக்கு லோக்சபாவில் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க கொண்டு வந்த மசோதாவை திமுகவும் காங்கிரசும் தோற்கடித்தது.

தமிழின விரோதிகள் மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான ஒரு கட்சி என்றால் அது திமுக, காங்கிரசும் தான்.விகிதாச்சார அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீதம் உயர்வு. யாருக்கும் பிரச்னையும் இல்லை. ஆனாலும் தோற்கடித்தள்ளனர். திமுகவுக்கும்,காங்கிரசுக்கும்பிரச்னை. மசோதாவை தோற்கடித்துள்ளனர். பெணகள் குரல் ஒலிக்கக்கூடாது என நினைத்த திமுக மற்றும் காங்கிரசுக்கு பெண்கள் ஓட்டுப் போடக்கூடாது. உங்கள் குரலைநசுக்கக்கூடிய திமுகவுக்கு ஒருவர் கூட ஓட்டுப்போடக்கூடாது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

வெட்கம் இல்லையா

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: மத்திய அரசு ஒன்றுமே தரவில்லை என்கிறார் ஸ்டாலின். அவருக்கு ஒன்றும் தெரியவில்லை.சட்டம் ஒழுங்கு சரியில்லை. பாதுகாக்க தவறியது முதல்வர் ஸ்டாலின்.ஈரான் போர் நடக்கிறது. பிரதமர் மோடி பெயர் சொன்னால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கிறது. போர் நடந்தாலும் இந்திய விமானங்கள் பறக்கின்றன.ஆனால், எனக்கும் , பிரதமருக்கும் தான் போட்டி என முதல்வர் சொல்கிறார். இதற்கு ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா. இவ்வாறு அவர் பேசினார்.

Source link