தயாரிப்பாளர் எல்ரெட் குமார், கடந்​த 2013ஆம்​ ஆண்​டு இயக்​குநர்​ கௌதம்​ வாசுதேவ்​ மேனனுக்​கு எதி​ராக சென்​னை உயர்​ நீதி​மன்​றத்​தில்​ வழக்​கு தொடர்ந்​திருந்​தார்​. அதில்​, சிம்​புவை வைத்த படமெடுக்க கௌதம் மேனனுடன் 2008ஆம் ஒப்​பந்​தம்​ போட்​ட​தாக​வும்​ அதற்​காக ரூ.4.25 கோடி கௌதம் மேனனுக்​கு கொடுத்தும் ஒப்​பந்​தத்​தின்​படி அவர் படத்தை இயக்​க​வில்​லை என்​றும் வாங்​கிய முன்​பணத்​தை​யும்​ திருப்​பித்​ தரவில்​லை என்றும்​ குற்​றம்​சாட்​டி​யிருந்​தார்​.
இந்​த வழக்கை வி​சா​ரித்​த சென்​னை உயர்​நீ​தி​மன்​ற தனி நீதிப​தி, கௌதம் மேனன் முன்பணமாக பெற்ற ரூ.4.25 கோடியை வட்​டி​யுடன்​ ​தயாரிப்​பாளருக்கு கொடுக்​க வேண்​டுமென கடந்​த 2022ஆம்​ ஆண்​டு உத்தரவிட்டிருந்​தார்​. இந்​த உத்​தர​வை எதிர்த்​து சென்​னை உயர்​ நீதி​மன்​றத்​தில்​ டிவிசன்​ அமர்​வு முன்​பு கௌதம் மேனன்​ மேல்​முறை​யீடு செய்​தார்​. இந்த வழக்கு விசாரணையில் தனி நீதிப​தி​யின்​ உத்​தரவை உறு​தி செய்​த டிவிசன்​ அமர்வு, 2010 மே மாதம்​ முதல்​ கணக்​கிட்​டு ஆண்​டுக்​கு 12 சதவீத வட்​டி​யுடன்​ சேர்த்​து வழங்​க வேண்​டும்​ என்றும்​ ஆணை​யிட்​டு மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்​ச நீதி​மன்​றத்​தில்​ கௌதம் மேனன் மேல்​முறையீடு செய்​தார். இந்​த மனு நீதிப​தி​கள்​ ஜெ.பி. பர்​தி​வாலா, கே.​வினோத்​ சந்​திரன்​ ஆகியோர்​ அடங்​கிய அமர்​வு முன்​பு வி​சா​ரணைக்​கு வந்​தது. அப்​போது மனுவை விசாரித்த அவர்கள், சென்​னை உயர்​ நீதிமன்​றம்​ பிறப்​பித்​த ஆணை​யில்​ தலை​யிடு​வதற்​கு எந்​த காரணத்தை​யும்​ காண முடிய​வில்​லை என்​று கூறி மனுவை தள்ளு​படி செய்​து உத்​தர​விட்​டனர்​. இதனால் கௌதம் மேனன் ரூ.4.25 கோடியை நீதி​மன்​றம்​ நிர்ணயித்த வட்​டியுடன்​ தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு திருப்​பி செலுத்​த வேண்​டும்​ என்​பது உறுதியாகியுள்ளது.
