சஞ்சு சாம்சன், சூர்யவன்ஷி ஏமாற்றம்; இந்தியா ரன் குவிப்பில் தடுமாற்றம்

கிறிஸ்ட்சர்ச்: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி ஹக்லே ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. ஷெய்பெர்ட் (7), ஆலன் (16), மிட்சல் (6) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிலிப்ஸ், ஜேக்கப்ஸ் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். இருவரும் அரைசதம் விளாசினார். பிலிப்ஸ் 70 ரன்னும், ஜேக்கப்ஸ் 58 ரன்னும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், பிரின்ஸ் யாதவ், நிதிஷ் குமார் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

181 ரன் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பே தடுமாற்றம் நிலவியது. சாம்சன் 14 ரன்னுடனும், இந்தத் தொடரில் முதல்முறையாக களமிறங்கிய சூர்யவன்ஷி வெறும் 4 ரன்னிலும் அவுட்டானார். அபிஷேக் சர்மா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 66 ரன்களை எடுத்து இருந்தது.

Source link