சண்டையில் முடிந்த விமர்சனம்; நீண்ட இடைவெளிக்கு பின் சிவாஜிக்கு சூப்பர் ஹிட் கொடுத்த கண்ணதாசன்: க்ளாசிக் ப்ளாஷ்பேக்

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணமாக இருந்த சிவாஜியும், பாடல்களுக்கு இலக்கனமாக கண்ணதாசன் இடையே பெரிய மோதல் இருந்த நிலையில், பட்டுக்கோட்டை எழுத வேண்டிய ஒரு பாடலை கண்ணதாசன் எழுதி சிவாஜிக்கு சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார். 

க்ளாசிக் தமிழ் சினிமாவில், தனது பாடல்கள் மூலம் பலரையும் கவர்ந்த கவியரசர் கண்ணதாசன் சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாதவர் என்றாலும், தன் மனதில் பட்டதை எப்போதும் வெளிப்படையாக பேசும் நபர். அப்படி ஒருமுறை தி.மு.க.வில் இருந்த சிவாஜி கணேசன், திருப்பதி கோவிலுக்கு சென்றது குறித்து கண்ணதாசன் தனது பத்தரிக்கையில், கடுமையாக விமர்சித்திருந்தார். 

தென்னாலிராமன் படத்தில் சிவாஜி உடல் முழுவதும் மண்ணில் புதைந்து தலை மட்டும் வெளியில் தெரியும் காட்சியின் போட்டோவை வைத்து, இனி கட்சியில் சிவாஜியின் நிலை இதுதான் என்று எழுதியிருந்தார். இதை பார்த்து கோப்பட்ட சிவாஜி, கண்ணதாசனை அடிக்க போக என்.எஸ்.கிருஷ்ணன் சமாதானம் செய்து வைத்துள்ளார். இந்த பிரச்சினையின் காரணமாக, சிவாஜியின் படங்களுக்கு கவிஞர் பாடல் எழுதவில்லை.

கண்ணதாசன் எழுத வேண்டாம் என்று சிவாஜி சொல்லவில்லை. சிவாஜி படத்திற்கு எழுதமாட்டேன் என்று கண்ணதாசனும் சொல்லவில்லை. ஆனால் பிரச்சினையைப் பற்றி தெரிந்ததால், தயாரிப்பாளர்கள் அப்படியே விட்டுவிட்டனர். அந்த சமயத்தில் சிவாஜி படங்களுக்கு அதிகமாக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தான் பாடல்கள் எழுதிக் காண்டு இருந்தார். அவரிடம் ‘பாகப்பிரிவினை’ படத்திற்கான பாடல்களை எழுதும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. 

கேட்டவுடன் ஒப்புக்கொண்ட பட்டுக்கோட்டையும், இரண்டு பாடல்களை எழுதி முடித்துவிட்டு, “நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களுக்கு பாடல் எழுத வேண்டும். நிச்சயம் அதற்கு இரண்டு வாரங்கள் ஆகிவிடும். நீங்கள் அவசரம் என்று கேட்கிறீர்கள். அதனால் 3-வது பாடலை கண்ணதாசனை வைத்து எழுதிக்கொள்ளுங்கள். நான் வேண்டுமானால் அவரிடம் பேசுகிறேன் என்று கூறியுள்ளனார். ஆனால் சிவாஜி ஒப்புக்கொள்வாரா என்ற சந்தேகத்துடன் அவரை அணுகிய படக்குழுவுக்கு சிவாஜி கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். 

சிவாஜி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவன் ஒத்துக்கிட்டான்னா எழுதட்டும்” என்று சொல்ல, கண்ணதாசனும் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை, எழுதுறேன்” என்று சொல்லி விட்டார். அப்போது ‘பாகப்பிரிவினை’ படத்திற்கு கவிஞர் எழுதிய முதல் பாடல், “ஏன் பிறந்தாய் மகனே..” என்ற பாடல் தான். இந்த பாடலை கேட்ட சிவாஜி கண்ணதாசன் வீட்டுகே நேராக வந்து அவரை கட்டி அனைத்து பாராட்டியுள்ளார். அதன்பிறகு தொடர்ந்து கண்ணதாசன் சிவாஜி படங்களுக்கு பாடல் எழுதினார். 

Source link