சரக்கு கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் பலி; உக்ரைன் தூதருக்கு மத்திய அரசு சம்மன்

டெல்லி,

உக்ரைன், ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்குமேல் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியர் பலி

இதனிடையே, கடந்த 18ம் தேதி ரஷிய எல்லைக்குள் செங்கடலில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. 3 இந்தியர்கள், 10 வெளிநாட்டினர் என 13 மாலுமிகளுடன் சென்ற அந்த சரக்கு கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரு இந்திய மாலுமி உயிரிழந்தார். இந்த தாக்குதலுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் தூதருக்கு சம்மன்

இந்நிலையில், சரக்கு கப்பல் மீதான தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உக்ரைன் தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், சரக்கு கப்பல் மீதான தாக்குதலுக்கு உக்ரைன் தூதரிடம் மத்திய அரசு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

Source link