சென்னை: சலானி குழுமத்தின், புதிய விளம்பர துாதராக, திரைப்பட இயக்குனர் ஜேசன் சஞ்சய் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில், சலானி குழுமத்தின் புதிய விளம்பரத் துாதர் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. சலானி குடும்பத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி, திரைப்பட இயக்குனர் ஜேசன் சஞ்சயை, குழுமத்தின் புதிய விளம்பர துாதராக அறிமுகம் செய்தார்.
அவர் பேசுகையில், ‘‘ஜேசன் சஞ்சயை, சலானி குழுமத்தில் இணைத்துக் கொள்வதில், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் கூட்டணி குழுமத்தின் வளர்ச்சிக்கும், எதிர்கால முன்னெடுப்புகளுக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும்,” என, நம்பிக்கை தெரிவித்தார்.
சலானி குழுமத்தின் துணை தலைவர் இளையராஜா, சலானி குழுமத்தின் வளர்ச்சி பயணம் குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டதுடன், எதிர்காலத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், நிறுவனத்தின் இயக்குனர் கவுதம் சலானி, ரிஷப் சலானி, ஸ்ரீபால் சலானி, தலைமை செயல் அதிகாரி சந்திரசேகர். தலைமை நிதி அதிகாரி கணேஷ்பாபு, துணை தலைவர்கள் இளையராஜா, மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
