அயலி சீரியல் எபிசோட் அப்டேட்: ஆஸ்திரேலியாவில் இருப்பதாக அக்காவிடம் பொய் சொன்ன கபிலன்… போதையில் போலீசில் சிக்கியதால் பரபரப்பு!
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘அயலி’ சீரியலில், அடுத்தடுத்து பல அதிரடி திருப்பங்கள் வந்துகிட்டே இருக்கு. அந்த வகையில், இன்றைய எபிசோடில், கபிலன் இங்கேதான் எங்கேயாவது இருப்பானோ என்ற சந்தேகம் இந்திராணிக்கு வருது. ஆனால், அவளிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல், ஒருபக்கம் கபிலனைத் தேடிக் கிளம்புறாங்க. இன்னொரு பக்கம் வர்மாவும் அவனோட ஆட்களும் கபிலனுடன் இருக்காங்க.
அப்போது, “யாராவது நம்மைப் பார்த்துடுவாங்களோன்னு பயமா இருக்கு”னு கபிலன் பதற்றப்படுறான். அதற்கு வர்மா, “இங்கே யாரும் உன்னைப் பார்க்க மாட்டாங்க. பயப்படாதே”னு தைரியம் கொடுக்கிறான். அந்த நேரத்தில் அயலியும் சிவாவும் அந்தப் பக்கமாக வர, ஒருவரையொருவர் பார்த்துடுவாங்களோ என்ற பதற்றம் அதிகமாகுது. நல்லவேளையாக, ரெண்டு பேரும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே அங்கிருந்து கடந்து போயிடுறாங்க.
நேரம் ஆகிட்டதால், “அக்கா திட்டுவாங்க, வா போகலாம்”னு சொல்லிட்டு கிளம்புறாங்க. அவங்க எங்கே போனாங்கன்னு கேட்கும்போது, “சாப்பாடு ஆறிப்போச்சு, வேலட் எடுக்கத்தான் போனோம்”னு சொல்லி சமாளிச்சுட்டு அங்கிருந்து நகர்றாங்க. மீட்டிங் முடிஞ்சு காரில் போய்க்கிட்டு இருக்கும்போது, கபிலனைப் போலவே ஒருத்தரைப் பார்த்து சந்தேகப்படுறாங்க. அது கபிலன்தானா என்பதைத் தெரிஞ்சுக்க உடனே அவனுக்குப் போன் பண்றாங்க.
அக்காவிடமிருந்து போன் வருவதைப் பார்த்ததும் கபிலன் பதற்றமடைய, வர்மாவோ, “பயப்படாதே, வீடியோ காலை மட்டும் எடுக்காதே”னு சொல்லி எச்சரிக்கிறான். இதையடுத்து ஆடியோ காலில் பேசும் கபிலன், “நான் இப்பதான் ஆஸ்திரேலியாவில் கிளாஸுக்குக் கிளம்பிட்டு இருக்கேன்”னு அப்பட்டமா பொய் சொல்றான். ஆனா, கபிலன் இங்கேயே இருப்பதைப் பார்த்துவிட்டதால், அவன் இவ்வளவு தைரியமாகப் பொய் சொல்வதை நினைச்சு குடும்பத்தினர் அதிர்ச்சியடைகிறாங்க. அவன் தங்களிடம் உண்மையை மறைக்கிறானே என்ற வேதனையில் அக்கா அழுதுவிடுகிறாள்.
மறுநாள் காலையில், இரவு குடித்துவிட்டு வண்டி ஓட்டியதற்காக கபிலனைப் போலீசார் பிடிச்சு காவல் நிலையத்தில் உட்கார வைக்கிறாங்க. இதனால் பயந்துபோகும் கபிலன், “எவ்வளவு பணம் வேணாலும் தர்றேன். இந்த விஷயம் மட்டும் வெளியே தெரிய வேண்டாம்”னு போலீசாரிடம் கெஞ்சுறான். ஆனா, போலீசாரோ, “எங்க உயர் அதிகாரி வரட்டும். அவர்கிட்ட போய் பேசிக்கோ”னு கறாராகச் சொல்லிடுறாங்க. இதனால் கபிலன் என்ன செய்வதுன்னு தெரியாமல் தவிக்கிறான்.
இன்னொரு பக்கம் அயலியும் சிவாவும் ரொமான்டிக்காகப் பேசிக்கிட்டு இருக்காங்க. ரெண்டு பேருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி, முத்தமிடும் அந்தத் தருணத்தில் திடீரென ஒரு போன் கால் வருது. அந்த அழைப்பில், கபிலன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் குடித்துவிட்டு வண்டி ஓட்டிய வழக்கில் போலீசிடம் சிக்கியிருக்கும் விஷயம் தெரியவருது.
இதைக் கேட்டதும் அதிர்ச்சியடையும் அயலியும் சிவாவும், உடனே காவல் நிலையத்துக்குக் கிளம்புறாங்க. இதற்கிடையில், காவல் நிலையத்துக்கு வெளியே நிற்கும் வர்மாவிடம் அவனுடைய ஆள், “இவனை ஒழுங்கா பார்த்துக்க மாட்டியா? ராத்திரி முழுக்கக் குடிச்சுட்டு போலீசில் மாட்டிக்கிற வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்த?”னு கோபமாகக் கேட்கிறான். அதற்கு வர்மா, “நேத்து ஏதோ பதற்றத்திலேயே இருந்தான். எப்போ போய் குடிச்சான்னே எனக்குத் தெரியல”னு சொல்லிட்டு முகக்கவசத்தை மாட்டிக்கிறான்.
இப்படி கபிலனின் பொய்கள் ஒவ்வொண்ணாக வெளியே வர, இப்போது அவன் போலீசிலும் மாட்டிக்கிட்டான். அடுத்து அயலியும் சிவாவும் கபிலனை எப்படி வெளியே கொண்டு வரப்போறாங்க? கபிலன் ஆஸ்திரேலியாவில் இருப்பதாகச் சொன்ன பொய் குடும்பத்தினர் முன்னிலையில் அம்பலமாகுமா? வர்மாவின் முகமூடி கிழியுமா? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: சாமுண்டீஸ்வரி மீது பாய்ந்த குண்டு! சிவனாண்டி கைது – அடுத்து நடந்தது என்ன?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலில், அடுத்தடுத்து அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், சாமுண்டீஸ்வரியை சிவனாண்டி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் குடும்பத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சாமுண்டீஸ்வரி வீட்டில் உள்ள அனைவரையும் ஒரு இடத்தில் நிற்க வைத்து, சந்திரகலாவிடம் உண்மையைச் சொல்லும்படி கேட்கிறார். ஆனால், சந்திரகலா உண்மையைச் சொல்லாமல் மறுத்துப் பேசுகிறார். இதனால் கோபமடையும் சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவின் கன்னத்தில் பளார் என்று அறைகிறார். மேலும், “உன்னை என் தங்கச்சியா நினைச்சேன். ஆனால், நீ இப்படி பண்ணுவேன்னு எதிர்பார்க்கல. உடனே இந்த வீட்டை விட்டு வெளியே போ” என்று கோபமாகச் சொல்கிறார்.
தன் மனைவி சந்திரகலாவை சாமுண்டீஸ்வரி அடிப்பதைப் பார்த்த சிவனாண்டி ஆத்திரமடைகிறார். உடனே அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியைப் பிடுங்கி, சாமுண்டீஸ்வரியை நோக்கி நீட்டுகிறார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, சிவனாண்டி துப்பாக்கியால் சுடுகிறார். இதில் சாமுண்டீஸ்வரி மீது குண்டு பாய, அவர் ரத்த வெள்ளத்தில் சரிகிறார்.
சாமுண்டீஸ்வரி கீழே விழுந்ததைப் பார்த்த கார்த்திக் அதிர்ச்சியடைகிறார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறார். இந்தப் பரபரப்பைப் பயன்படுத்திக் கொண்டு மாயாவும் மகேஷும் நெக்லஸைத் திருட நினைக்கிறார்கள். ஆனால், நெக்லஸ் இருந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது அது அங்கு இல்லை. சாமுண்டீஸ்வரி ஏற்கெனவே உஷாராகி, நெக்லஸை வேறு இடத்துக்கு மாற்றி வைத்திருப்பது தெரிய வருகிறது.
மறுபக்கம், கார்த்திக் சாமுண்டீஸ்வரியை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கிறார். துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதால் உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களிடம் வலியுறுத்துகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் பதற்றத்தில் இருக்கின்றனர். இதற்கிடையில், சாமுண்டீஸ்வரியைத் துப்பாக்கியால் சுட்ட குற்றத்துக்காக சிவனாண்டியை போலீசார் கைது செய்கின்றனர்.
போலீஸ் காவலில் இருக்கும் சிவனாண்டியை சந்திரகலா சந்திக்கிறார். அப்போது, “ஏன் இப்படி பண்ணீங்க?” என்று கேட்கிறார். அதற்கு சிவனாண்டி, “என் மனைவியை ஒருத்தி அடிக்கும்போது நான் சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருப்பேனா? கார்த்திக் மட்டும் அந்த ஆதாரத்தைக் காட்டாமல் இருந்திருந்தால், இந்நேரம் சாமுண்டீஸ்வரியைத் தீர்த்துக்கட்டி உன்னை அந்த இடத்தில் உட்கார வைத்திருப்பேன்” என்று ஆவேசமாகப் பேசுகிறார்.
மேலும், “நீ கவலைப்படாதே, நம்ம திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றுவோம்” என்று சந்திரகலாவிடம் சொல்கிறார். இதற்கிடையில், துப்பாக்கிச் சூட்டைச் செய்தது சிவனாண்டிதான் என்பது உறுதியானதால், சிறையில் இருந்த பாட்டி விடுதலை செய்யப்படுகிறார். இப்படி சாமுண்டீஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்க, சிவனாண்டி சிறைக்குச் சென்றுவிட்டார். பாட்டியும் விடுதலையாகிவிட்டார். இனி சந்திரகலா என்ன செய்யப் போகிறார்? சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா? மாயா, மகேஷின் அடுத்த திட்டம் என்ன? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சின்னஞ்சிறு கிளியே சீரியல் அப்டேட்: கர்ணாவுடன் ஒரே அறையில் மாட்டிக்கொண்ட இந்து… புவனா போட்ட திட்டம் என்ன ஆனது?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘சின்னஞ்சிறு கிளியே’ சீரியலில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் வந்துகிட்டே இருக்கு. குடும்பத்துக்குள்ள நடக்கும் சண்டைகள், சதித்திட்டங்கள்னு கதை பரபரப்பா போயிட்டு இருக்கு. அந்த வகையில், இன்றைய எப்சோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
முந்தைய நாள் இரவு, தன்னோட அண்ணன் சொல்றதை கேட்காம சித்ரா அடம்பிடிச்சு நடந்துக்கிறதை நினைச்சு வருத்தப்படுறாள். அப்போது அவள்கிட்ட என்னாச்சுன்னு கேட்க, தன்னோட மனக்குமுறலை எல்லாம் சொல்லிட்டு படுத்துக்கிறாள். மறுநாள் காலையில் சாந்தி பேசிக்கிட்டு இருக்கும்போது அங்கே வரும் புவனா, “நான் கர்ணா மாமாவுக்குக் காபி போட்டுக் கொடுக்கப் போறேன்”னு சொல்லி அவளைக் கடுப்பேத்துறாள்.
சாந்தி காபி எடுத்துக்கிட்டு கர்ணாவைப் பார்க்கப் போறதுக்கு முன்னாடியே, புவனா முந்திக்கிட்டு கர்ணாவுக்குக் காபி கொடுத்துடுறாள். இதையெல்லாம் பார்த்த கர்ணாவும் இந்துவை வெறுப்பேத்துறதுக்காகவே, “இப்பதான் காபி குடிக்கலாம்னு நினைச்சேன் புவனா… காபி ரொம்ப நல்லா இருக்கு, சூப்பரா இருக்கு!”னு பாராட்டுறான்.ஆனா, புவனா அங்கிருந்து போனதும் சாந்திகிட்ட திரும்பி, “இந்த மொக்க காபியை நீயே குடி!”னு சொல்லிட்டு போயிடுறான்.
இதைப் பார்த்த சாந்தி என்ன நடக்குதுன்னே புரியாம குழம்பிப் போறாள்.
இன்னொரு பக்கம், இந்து நம்ம வீட்டிலேயே இருந்துக்கிட்டு கெத்தா சுத்திக்கிட்டு இருக்காளேன்னு குடும்பத்தினர் புலம்பிக்கிட்டு இருக்காங்க. அப்போது குறுக்கிடும் கிருபா, “தேர்தல் முடியுற வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்க. தேர்தல் முடிஞ்சதும் அவளுக்கு ஒரு முடிவு கட்டிடலாம்”னு சொல்றார். அதோட, “இப்ப எல்லாரும் வளைகாப்பு ஃபங்ஷனுக்குக் கிளம்புங்க. அங்கே போய் தேவையில்லாம எந்தப் பிரச்சினையும் பண்ணக்கூடாது”னு எல்லாரையும் எச்சரிச்சு அனுப்பி வைக்கிறார்.
குடும்பத்தினர் எல்லாரும் வளைகாப்பு விழாவுக்குக் கிளம்பத் தயாராகுறாங்க. அந்த நேரத்தில் இந்து குளிக்கப் போறாள். இதைப் பார்த்த புவனா, இந்துவை விழாவுக்குப் போகவிடாம தடுத்துட்டு, தான் மட்டும் கர்ணாவுடன் காரில் ஜாலியா போகலாம்னு திட்டம் போடுறாள். ஆனா, சாந்தி குளிக்கப் போன அறைக்குள் கர்ணாவும் ஏற்கெனவே இருப்பது புவனாவுக்குத் தெரியாது. இதை எதுவும் யோசிக்காம, அவள் அறையின் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டுப் போயிடுறாள்.
மற்றவர்கள் சாந்தியும் கர்ணாவும் எங்கேன்னு கேட்கும்போது, “அவங்க நேரா தீபாவளி வீட்டுக்கு வந்துடுவாங்க”னு சொல்லி சமாளிக்கிறாள். அதுக்குப் பிறகு குடும்பத்தினர் எல்லாரையும் காரில் ஏற்றி வளைகாப்பு விழாவுக்குக் கிளம்ப வச்சிடுறாள்.
இதற்கிடையில், அறைக்குள் மாட்டிக்கொண்ட இந்துவும் கர்ணாவும் கதவைத் தட்டிப் பார்க்கிறாங்க. ஆனா, கதவைத் திறக்க யாரும் வராததால், ரெண்டு பேரும் உள்ளேயே தவிக்கிறாங்க. புவனா போட்ட திட்டத்தால் இந்துவும் கர்ணாவும் ஒரே அறையில் மாட்டிக்கிட்ட இந்தச் சூழ்நிலை, அவங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்கிற மனக்கசப்பைத் தீர்க்குமா? இல்ல, புதுசா ஏதாவது பிரச்சினை உருவாகுமா? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
