சினிமாவில் ஹீரோ, அரசியலில் வில்லன்.. வரலாற்றைத் திரித்து பேசும் முதல்வர் விஜய் – ரகுபதி காட்டம் – former dmk minister raghupathy has criticized cm vijay describing him as a hero in cinema but a villain in politics

சட்டமன்ற கூட்டத்தொடரின் போது முதல்வர் விஜய் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசினார். அப்போது மிசா பார்த்தவர்கள்.. மிசா பார்த்தவர்கள் என்று சொல்கிறார்.. மிசா குறித்த வரலாறு எல்லாருக்கும் தெரியும். அதே போல் சர்காரியா கமிஷன் குறித்து திமுகவை நேரடியாக விமர்சித்து பேசியிருந்தார். முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழகம் முழுவதும் திமுக சார்ப்பில் முதல்வர் விஜய்யை சந்தித்து போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, புதுக்கோட்டையில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கலந்துக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர் கூறுகையில், சட்டமன்றத்தில் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் அனுபவித்த கொடுமைகளைக் கொச்சைப்படுத்தி முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.

அதேபோல, டிராப் செய்யப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கையை அடிப்படையாக வைத்து, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசோலி மாறன் மற்றும் தலைவர் கலைஞர் மீது பழிசுமத்திப் பேசியுள்ளார்.நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்படாத, குற்றப்பத்திரிகை நிலையிலேயே உள்ள விசயங்களை வைத்துப் பேசுவது தவறான முன்னுதாரணமாகும். சினிமாவில் ஹீரோவாக வலம் வந்த முதல்வர் விஜய், அரசியலில் ஒரு வில்லன் கதாபாத்திரத்தையே ஏற்றுச் செய்து வருகிறார்.

மிசா காலத்தில் எங்களது மூத்த தலைவர் சிட்டிபாபு உயிரையே இழந்துள்ளார். வரலாற்றைத் திரித்துப் பேசும் இயக்கமாகத் தவேக உருவெடுத்து வருகிறது. நாளையே காந்தியடிகளுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்ததே விஜய்யின் கொள்ளுத்தாத்தா தான் என்று கூட இவர்கள் புதுக்கதை எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அடிப்படையற்ற பொய்களையும் அபாண்டமான குற்றச்சாட்டுகளையும் பேசுவதையே தொழிலாகக் கொண்டு இயங்கி வரும் தவேக அரசின் இந்த அணுகுமுறை கடும் கண்டனத்திற்குரியது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Source link