உமா கேட்ட கேள்வி: மிஸ் சென்னை அழகிப் பட்டம் வென்ற த்ரிஷா கிருஷ்ணன் மாடலாக தன் கெரியரை துவங்கினார். அப்பொழுது எல்லாம் நான் படங்களில் நடிக்க மாட்டேன், அது என் cup of tea கிடையாது என்று மீண்டும் மீண்டும் தெரிவித்தார். ஆனால் ஒரு சுபயோக சுபதினத்தில் நடிக்க வந்துவிட்டார்.
நடிகையாகவே மாட்டேன் என்று சொல்லி வந்த த்ரிஷா எப்படி நடிக்க வந்தார் என்கிற கேள்வி பலருக்கும் எழுந்தது. இந்நிலையில் பெப்சி உமாவின் பழைய வீடியோ மூலம் அந்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது. அந்தத் வீடியோவில் பெப்சி உமா கூறியதாவது, உங்களிடம் ரொம்ப நாளாக ஒரு கேள்வி கேட்க வேண்டும் என நினைத்தேன். சில பத்திரிகைகளில் உங்களின் பேட்டியை படித்திருக்கிறேன். எக்காரணத்திற்காகவும் நான் சினிமாவுக்கு வர மாட்டேன் என்று திரையுலகிற்கு வருவதற்கு முன்பு பேட்டிகள் கொடுத்திருக்கீங்க. இப்போ சினிமாவில் இருக்கிறீர்கள். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம். தப்பா நினைத்துக்கொள்ள வேண்டாம் என்றார்.
குழப்பத்தில் த்ரிஷா: அதற்கு த்ரிஷாவோ, நான் கண்டிப்பாக சினிமா பண்ண மாட்டேன் என மாடலிங்கில் இருந்தபோது பல முறை சொல்லியிருக்கிறேன். அப்போ அப்படி சொன்னியே, இப்போ நடிக்க வந்துட்டியேனு நிறைய பேர் கிண்டல் பண்ணுவாங்க. எப்படி முடிவை மாற்றிக் கொண்டனு கேட்பாங்க. அப்போ என்ன வேண்டும் என்று எனக்கு சரியாக தெரியவில்லை, குழப்பத்தில் இருந்தேன். படங்களில் நடிக்கணுமா இல்லை படிப்பை தொடரலாமானு இருந்தேன். முதலில் படிப்பை முடிப்போம். படித்து முடித்த பிறகு படங்களில் நடிக்கலாம் என நினைத்தேன். சினிமாவில் ஆர்வம் இல்லை என்று கிடையாது. முதலில் படிப்பை முடிக்கணும் என்று இருந்தேன் என்றார்.
பள்ளியில் படித்தபோது டிவி நிகழ்ச்சியில் வந்தபோது கூட, சினிமாவுக்கு வரவே மாட்டேன் என்று யூகி சேதுவிடம் திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனால் படித்து வேலைக்கு செல்லவில்லை மாறாக சினிமாவுக்கு வந்து அந்த துறையில் சாதித்துவிட்டார் த்ரிஷா கிருஷ்ணன்.
நம்பிக்கை கொடுத்த சாமி: முதல் படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நடித்த த்ரிஷா, அடுத்து ஹீரோயின் ஆனார். அவர் நடித்த முதல் இரண்டு படங்கள் சரியாக போகவில்லை. இதையடுத்து சீயான் விக்ரம் போலீசாக நடித்த சாமி படமும் ஓடாவிட்டால் சினிமாவை விட்டு போய்விடலாம் என்கிற முடிவில் இருந்தார் த்ரிஷா. ஆனால் சாமி படம் சூப்பர் ஹிட்டானதும் சினிமா தான் நமக்கானது என தங்கிவிட்டார்.
சாமி படம் கொடுத்த தைரியத்தில் சினிமாவில் தங்கிய அவர், தொடர்ந்து 24 ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்து வருகிறார். அதுவும் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது எல்லாம் எல்லோருக்கும் அமைந்துவிடாது.
த்ரிஷா கிருஷ்ணன் நடிப்பில் கடைசியாக வெளியான கருப்பு படம் பிளாக்பஸ்டரானது. சூர்யா சாமியாக நடித்த கருப்பு படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததற்கு காரணமே த்ரிஷா ராசி என்று ஒரே போடாக போட்டார்கள் சவுத் குயின் ரசிகர்கள்.சூர்யாவுக்கு மட்டும் இல்லை விஜய், அஜித் குமார் ஆகியோருக்கும் ரொம்பவே ராசியான ஹீரோயின் என்றால் அது எங்கள் த்ரிஷா தான் என்றார்கள் அவரின் ரசிகர்கள் தெரிவித்தார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இதற்கிடையே இந்த வருடமாவது த்ரிஷாவுக்கு கல்யாணம் நடக்கட்டும் கடவுளே என பிரார்த்தனை செய்கிறார்கள் ரசிகர்கள்.
Source link
